குட்டி ரயில் மூலம் உணவு சப்ளை; ஹுப்பள்ளியில் புதிய ஓட்டல் திறப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

குட்டி ரயில் மூலம் உணவு 'சப்ளை'; ஹுப்பள்ளியில் புதிய ஓட்டல் திறப்பு

Added : அக் 02, 2021
Share
ஹுப்பள்ளி : ஹுப்பள்ளியில் புதிய முயற்சியாக, வாடிக்கையாளர்கள் கவரும் வகையில், குட்டி ரயில் மூலம் உணவு சப்ளை செய்யும் புதிய ஓட்டல் உதயமாகியுள்ளது. பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.ஹுப்பள்ளி - தார்வாட், என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது 'தார்வாட் பேடா' எனும் பால்கோவா தான். அந்த அளவுக்கு பால்கோவா சுவையாக இருக்கும்.தற்போது மேலும் புகழ்பெற்று வருகிறது. ஆம்,
குட்டி ரயில் மூலம் உணவு 'சப்ளை'; ஹுப்பள்ளியில் புதிய ஓட்டல் திறப்பு

ஹுப்பள்ளி : ஹுப்பள்ளியில் புதிய முயற்சியாக, வாடிக்கையாளர்கள் கவரும் வகையில், குட்டி ரயில் மூலம் உணவு சப்ளை செய்யும் புதிய ஓட்டல் உதயமாகியுள்ளது. பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

ஹுப்பள்ளி - தார்வாட், என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது 'தார்வாட் பேடா' எனும் பால்கோவா தான். அந்த அளவுக்கு பால்கோவா சுவையாக இருக்கும்.தற்போது மேலும் புகழ்பெற்று வருகிறது. ஆம், ஹுப்பள்ளியில் உள்ள புதிய நீதிமன்ற வளாகம் அருகில் 'பிருத்வி பாரடைஸ்' என்ற ஓட்டல் அமைந்துள்ளது.

இந்த ஓட்டலில் புதிய முயற்சியாக, குட்டி ரயில் மூலம் உணவு சப்ளை செய்யப்படுகிறது. வாடிக்கையாளர்களை கவரும் வகையில் புதிய முயற்சி மேற்கொண்டுள்ளனர். நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. நமக்கு வேண்டிய உணவை ஊழியர்களிடம் கூறினால் போதும், சமையல் அறையிலிருந்து, நாம் அமர்ந்திருக்கும் இருக்கை தேடி, உணவை ரயில் கொண்டு வந்து நின்று விடும்.

பச்சை விளக்கு எரியும் போது, உணவு எடுத்து கொள்ள வேண்டும். பின், சிவப்பு விளக்கு எரியும் போது, 'ரிவர்சில்' சமையலறைக்கு சென்று விடும். ஒவ்வொரு இருக்கைக்கும், சென்னை, மும்பை, பெங்களூரு, கோல்கட்டா, டில்லி என பெயர் வைத்துள்ளனர்.குழந்தைகளை வெகுவாக ஈர்த்துள்ளது. கொரோனாவால் வீட்டில் முடங்கி கிடந்த குழந்தைகள் பலரும், அந்த ஓட்டலுக்கு அழைத்து செல்லும்படி பெற்றோரை வேண்டுகின்றனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X