பொது செய்தி

இந்தியா

ஹானகல் தொகுதியில் இரண்டாவது இடைத்தேர்தல்

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஹாவேரி : ஹானகல் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க தயாராகிறது. இது, எம்.எல்.ஏ., மறைவால் நடக்கும், இரண்டாவது இடைத்தேர்தலாகும்.ஹாவேரி ஹானகல் தொகுதியின், பா.ஜ., -- எம்.எல்.ஏ., உதாசி மறைவால், இத்தொகுதிக்கு அக்டோபர் 30ல், இடைத்தேர்தல் நடக்கஉள்ளது.இதுபோல, இதற்கு முன்பும் நடந்துள்ளது. 1967ல் பி.ஆர்.பாட்டீல் சுயேச்சையாக வெற்றி பெற்றிருந்தார். இவர், 1968ல் காலமானதால் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல்

ஹாவேரி : ஹானகல் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்க தயாராகிறது. இது, எம்.எல்.ஏ., மறைவால் நடக்கும், இரண்டாவது இடைத்தேர்தலாகும்.ஹாவேரி ஹானகல் தொகுதியின், பா.ஜ., -- எம்.எல்.ஏ., உதாசி மறைவால், இத்தொகுதிக்கு அக்டோபர் 30ல், இடைத்தேர்தல் நடக்கஉள்ளது.

இதுபோல, இதற்கு முன்பும் நடந்துள்ளது. 1967ல் பி.ஆர்.பாட்டீல் சுயேச்சையாக வெற்றி பெற்றிருந்தார். இவர், 1968ல் காலமானதால் இத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடந்தது. தற்போது உதாசி மறைவால் இடைத்தேர்தல் நடக்கவுள்ளது.ஹானகல்லின் 40 ஆண்டு கால, தேர்தல் வரலாற்றில் உதாசி மற்றும் மனோஹர் தாசில்தார் இடையே மட்டுமே நேரடி போட்டி இருந்தது. இவ்விருவரை தவிர வேறு யாரும் தேர்ந்தெடுக்கப்பட்டதில்லை. 1978 முதல் இதுவரை, தொகுதி மக்கள் ஒரு முறை உதாசி; மற்றொரு முறை மனோஹர் தாசில்தாரை தேர்ந்தெடுத்து, சட்டசபைக்கு அனுப்பினர்.

இப்படி மாறி மாறி அவர்கள் இருவரை மட்டுமே தேர்ந்தெடுத்துள்ளது, இந்த தொகுதி. கட்சியை விட நபரின் தனித்தன்மைக்கு முக்கியத்துவம் தரும் தொகுதி இது.ஹானகல் விவசாயத்தை மையப்படுத்திய தாலுகா. 700க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. இவையே இங்குள்ள விவசாயிகளின் உயிர் நாடி. மூன்று பேரூராட்சிகள் உள்ள இந்த தாலுகா 775 சதுர கி.மீ., கொண்டதாகும். 2011 மக்கள் கணக்கெடுப்பின் படி, ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 171 ஆண்கள்; ஒரு லட்சத்து 27 ஆயிரத்து 284 பெண்கள் உள்ளனர்.இத்தொகுதி, முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த மாவட்டத்துக்கு உட்பட்டது என்பதால், இது 'ஹைவோல்டேஜ்' தொகுதியாக கருதப்படுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X