பொது செய்தி

இந்தியா

பி.பி.எல்., ரேஷன் கார்டு முறைகேடு தடுப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
பெங்களூரு : ரேஷன் பொருட்களை வழங்குவதில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க உணவு மற்றும் பொது வினியோகத்துறை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இப்போது பின்பற்றும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம், 66 ஆயிரம் பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் முறைகேடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.வறுமை கோட்டுக்கு கீழுள்ள குடும்பத்தினருக்கு, பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார்டு வைத்துள்ள

பெங்களூரு : ரேஷன் பொருட்களை வழங்குவதில் நடக்கும் முறைகேடுகளை தடுக்க உணவு மற்றும் பொது வினியோகத்துறை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இப்போது பின்பற்றும் புதிய தொழில்நுட்பத்தின் மூலம், 66 ஆயிரம் பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் முறைகேடு தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வறுமை கோட்டுக்கு கீழுள்ள குடும்பத்தினருக்கு, பி.பி.எல்., ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த கார்டு வைத்துள்ள பயனாளிகளுக்கு பல சலுகைகள் கிடைக்கின்றன.ஆனால் அரசு ஊழியர்கள், பணக்காரர்கள், அதிக வருவாய் உள்ளவர்கள், தகுதியற்றவர்கள் பொய்யான தகவல் தெரிவித்து, பி.பி.எல்., கார்டுகள் பெற்று, சலுகைகளை அனுபவிக்கின்றனர். இதனால் அரசுக்கு பொருளாதார சுமை ஏற்படுகிறது.தகுதியற்றவர்கள் பெற்றுள்ள பி.பி.எல்., கார்டுகளை, உணவுத்துறை கண்டுபிடித்து ரத்து செய்கிறது. இது வரை 4.5 லட்சத்துக்கும் அதிகமான கார்டுகள் ரத்தாகியுள்ளன.

இதனால் அரசுக்கு ஆண்டு தோறும், 100 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மிச்சமாகும் என கூறப்படுகிறது. முறைகேடாக பி.பி.எல்., கார்டு பெற்றால், கிரிமினல் வழக்கு பதிவு செய்வதாக உணவுத்துறை எச்சரித்துள்ளது.தற்போது முறைகேட்டை தடுக்க, உணவுத்துறை மற்றொரு வழியை கண்டுப்பிடித்துள்ளது. வருவாய்த்துறை 'இ -- ஜென்மா' தொழில்நுட்பம் மூலம் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்குகிறது.இந்த தொழில்நுட்பத்தில் இறந்தவர்கள் பற்றிய தகவலை சேகரித்த போது 66 ஆயிரத்து 517 இறந்த நபர்களின் பெயரில் பி.பி.எல்., ரேஷன் கார்டு பெற்றுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த கார்டுகள் ரத்தாகியுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X