பொது செய்தி

இந்தியா

புதிய உதவி ஆர்.டி.ஓ., அலுவலகம் ரூ.2 கோடியில் தங்கவயலில் உருவாகிறது

Added : அக் 02, 2021
Share
Advertisement
தங்கவயல் : தங்கவயல் உதவி ஆர்.டி.ஓ., புதிய அலுவலகம், 5 ஏக்கரில், இரண்டு கோடி ரூபாயில் உருவாக்கப்படுகிறது.தங்கவயல் டோல்கேட் அருகில் உதவி ஆர்.டி.ஓ., அலுவலகம் இருந்து வருகிறது. இந்த அலுவலகத்துக்கு போதுமான இட வசதி இல்லாததால் இடமாற்றம் செய்ய ஆய்வுப் பணிகள் நடந்தது.தங்கவயல், மாலுார், பங்கார்பேட்டை, ஆகிய மூன்று தாலுகாவை சேர்ந்தோருக்காக தங்கவயலில் உதவி ஆர். டி.ஓ. அலுவலகம் 60

தங்கவயல் : தங்கவயல் உதவி ஆர்.டி.ஓ., புதிய அலுவலகம், 5 ஏக்கரில், இரண்டு கோடி ரூபாயில் உருவாக்கப்படுகிறது.

தங்கவயல் டோல்கேட் அருகில் உதவி ஆர்.டி.ஓ., அலுவலகம் இருந்து வருகிறது. இந்த அலுவலகத்துக்கு போதுமான இட வசதி இல்லாததால் இடமாற்றம் செய்ய ஆய்வுப் பணிகள் நடந்தது.தங்கவயல், மாலுார், பங்கார்பேட்டை, ஆகிய மூன்று தாலுகாவை சேர்ந்தோருக்காக தங்கவயலில் உதவி ஆர். டி.ஓ. அலுவலகம் 60 ஆண்டுகளாக இருக்கிறது.இங்கு வாகனங்கள் ஓட்டுவதற்கு பயிற்சி, பரிசோதனை உட்பட அனைத்து பணிகளுக்கும் இடம் வசதி போதுமானதாக இல்லை. எனவே விசாலமான இடத்தை கடந்த ஆறு மாதங்களாக தேடி வந்தனர்.தங்கவயல் தொகுதிக்கு உட்பட்ட பேத்தமங்களா - சுந்தரபாளையம் இடையே அரசு நிலத்தை ஆய்வு செய்தனர். தங்கவயல் நகர பகுதிக்குள் இருக்க வேண்டும் என பலரும் வலியுறுத்தி வந்தனர்.

இந்நிலையில், 'பெமல்' ஸ்டேடியம் அருகில் அரசு நிலம் 5 ஏக்கரை மாவட்ட கலெக்டர் செல்வமணி உதவி ஆர்.டி.ஓ., அலுவலகம் ஏற்படுத்த ஒப்புதல் அளித்தார்.அதன்படி, அந்த இடத்தை நேற்று தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரூபகலா, நகராட்சி தலைவர் முனிசாமி, தாசில்தார் சுஜாதா, உட்பட அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.அப்போது, ரூபகலா கூறுகையில், ''தங்கவயலில் புதிய உதவி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை அமைக்க 5 ஏக்கர் இடம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில், கட்டுமான பணிகளை 2 கோடி ரூபாய் செலவில் ஏற்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் பணியை விரைவில் துவங்கப்படும்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X