4 பேரை கொன்ற ஆட்கொல்லி புலியை சுட்டு கொல்ல உத்தரவு

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (16) | |
Advertisement
கூடலுார் : கூடலுார் அருகே, நேற்று மீண்டும் ஒருவரை புலி தாக்கி கொன்றதை அடுத்து, அதை சுட்டுக் கொல்ல வனத்துறை உத்தரவிட்டுள்ளது. நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலையில், தனியார் எஸ்டேட் தொழிலாளி சந்திரன், 51, என்பவரை, செப்., 24ல் புலி தாக்கி கொன்றது. ஏற்கனவே இருவரையும், சில மாடுகளையும் கொன்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில், வனத்துறையினர்

கூடலுார் : கூடலுார் அருகே, நேற்று மீண்டும் ஒருவரை புலி தாக்கி கொன்றதை அடுத்து, அதை சுட்டுக் கொல்ல வனத்துறை உத்தரவிட்டுள்ளது.latest tamil newsநீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலையில், தனியார் எஸ்டேட் தொழிலாளி சந்திரன், 51, என்பவரை, செப்., 24ல் புலி தாக்கி கொன்றது. ஏற்கனவே இருவரையும், சில மாடுகளையும் கொன்ற புலியை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கும் பணியில், வனத்துறையினர் ஈடுபட்டனர்.அப்பகுதியில் ஏழு நாட்கள் தேடி வந்த நிலையில், புலி முதுமலை வழியாக, 30 கி.மீ., தொலைவில் உள்ள மசினகுடிக்கு நேற்று காலை வந்துள்ளது.

பகல் 1:00 மணிக்கு, கல்குவாரி அருகே மாடு மேய்த்து கொண்டிருந்த குரும்பர்பாடியைச் சேர்ந்த மங்களபசுவன், 85, என்பவரை புலி தாக்கி இழுத்து சென்றது. இதை நேரில் பார்த்த மக்கள் அலறியடித்து ஓடினர்.தொடர்ந்து, ஒரு கையை இழந்த நிலையில் முட்புதரில் கிடந்த முதியவர் உடலை கண்டுபிடித்தனர். போலீசார், வனத்துறையினர் உடலை எடுக்க சென்றபோது பொதுமக்கள் தடுத்தனர்.


latest tamil news'இதுவரை நான்கு பேரை கொன்ற புலியை சுட்டுக் கொல்லும் வரை உடலை எடுக்க அனுமதிக்க மாட்டோம்' என தெரிவித்து, மசினகுடி பஸ் ஸ்டாண்ட் சந்திப்பில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.இறந்தவர் உடலை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக எடுத்து வந்தனர். அப்போது, பொதுமக்கள் தடுத்ததால், தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
அவசர உத்தரவு
இந்நிலையில், தலைமை முதன்மை வன உயிரின பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ், ஆட்கொல்லி புலியை சுட்டுக் கொல்ல உத்தரவிட்டார்.'மனித உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் மிகவும் அபாயகரமான புலியை, வேட்டையாட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளை முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் மற்றும் உயர் அதிகாரிகள் முன்னிலையில், புகைப்படம் மற்றும் வீடியோ பதிவு செய்ய வேண்டும்' என, அவர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த தகவலை வனத்துறை அதிகாரிகள், மக்களிடம் தெரிவித்தனர். இதையடுத்து, ஐந்து மணி நேர போராட்டம் கைவிடப்பட்டது.வனத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் கூறுகையில், ''தமிழக, கேரளா, கர்நாடகா வனத்துறை மற்றும் அதிரடிப்படை போலீசார் 80 பேர், புலியை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர். மக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திரு.திருராம் - திரு.திருபுரம்,இந்தியா
04-அக்-202114:13:52 IST Report Abuse
திரு.திருராம் காடுகளின் ஆக்கிரமிப்பு, அழிப்பு ஆகியவை உலக வெப்பமயமாதலில் முதல் காரணி, ஐஸ்லாந்திலேயே எரிமலை குமுறல், துருவங்களில் மிக மிக அவசரமாக உருகும் பனி, சில ஆண்டுகளில் காணாமல் போகப்போகும் தீவுகள் என்பன பல எல்லாம் பல லட்சம் ஆண்டுகளுக்கு பிறகு பூமி தற்போது சந்திக்கும் அழிவுகள், நமது பொறுப்பற்றதனம் உலக அழிவை விரைவுபடுத்தும்,,,,
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
02-அக்-202115:45:10 IST Report Abuse
pradeesh parthasarathy இங்கு புலிக்காகவும், யானைக்காகவும் பரிதவிக்கும் கூட்டம் ஸ்டெர்லிட் போராட்டத்தில் பதிமூன்று பேர் கொல்லப்பட்ட பொது ஒரு துக்கமும் இவர்களுக்கு வரவில்லை... இவகளது பார்வையில் இப்போ விவசாயிகளும் சமூக விரோதிகள் ... மூணு நேரமும் மூக்கு முட்ட சாப்பிடும்போது அந்த உணவு எப்படி வந்தது என்று கொஞ்சம் சிந்தியுங்கள்.... விவஸ்யம் ஒன்றும் பட்டணத்தில் செய்ய முடியாது ... தண்ணீர் வளம் , மண் வளம் நன்றக இருக்கும் இடத்தில் தான் செய்ய முடியும் ...அப்படி தான் இந்த கொல்லப்பட்ட விவசாயிகளும் தங்களத்தை வாழ்வாதாரத்தை செய்து கொண்டிருக்கிறார்கள் ...
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
02-அக்-202115:26:19 IST Report Abuse
pradeesh parthasarathy தேயிலை தோட்டங்கள், காப்பி தோட்டங்கள், ஏலக்காய் தோட்டங்கள், ரப்பர் தோட்டங்கள், நல்லமிளகு போன்ற பயிர்கள் மலை சார்ந்த பகுதிகளில் தாண் வளரும்... இப்பயிர்கள் மூலம் நாட்டுக்கு ஏராளமான அந்நிய செலாவணி கிடைக்கிறது... இங்கு கறுத்து கூறிய பெருமான்மையானோர் நகரங்களில் வசிப்போர்... பலியானோர் விவசாய கூலிகள்... இவர்கள் வனங்களை ஓன்று ஆக்கிரமித்து விவசாயம் செய்யவில்லை... மலைஅடியோரங்களில் விவசாயம் செய்கிறார்கள்... தற்பொழுது காட்டு மிருகங்களின் எண்ணிக்கை கூடி கொண்டிருக்கிறது.... அவை மனிதனின் இருப்பிடத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.. அப்படி தான் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X