பொது செய்தி

இந்தியா

ஹிந்து பெண்ணுக்கு தாலி கட்டிய முஸ்லிம் வாலிபர்

Added : அக் 02, 2021
Share
Advertisement
எம்.எஸ்.பாளையா : பெங்களூரு எம்.எஸ்.பாளையாவில் ராஜஸ்தானை சேர்ந்த சேக் ஷா, 25 என்பவர் வசித்து வருகிறார். இவர் இதே பகுதியை சேர்ந்த 19 வயது ஹிந்து பெண்ணை, நேற்று கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.தகவலறிந்த பெண்ணின் பெற்றோர் எம்.எஸ்.பாளையா போலீஸ் நிலையம் வந்து, சேக் ஷா மீது புகார் அளித்துள்ளனர். அதில், 'என் மகளின் மனதை மாற்றி, முஸ்லிம் வாலிபர் திருமணம் செய்து

எம்.எஸ்.பாளையா : பெங்களூரு எம்.எஸ்.பாளையாவில் ராஜஸ்தானை சேர்ந்த சேக் ஷா, 25 என்பவர் வசித்து வருகிறார். இவர் இதே பகுதியை சேர்ந்த 19 வயது ஹிந்து பெண்ணை, நேற்று கோவிலில் தாலி கட்டி திருமணம் செய்து கொண்டார்.

தகவலறிந்த பெண்ணின் பெற்றோர் எம்.எஸ்.பாளையா போலீஸ் நிலையம் வந்து, சேக் ஷா மீது புகார் அளித்துள்ளனர். அதில், 'என் மகளின் மனதை மாற்றி, முஸ்லிம் வாலிபர் திருமணம் செய்து கொண்டுள்ளார். ஹிந்து முறைப்படி தாலி கட்டி திருமணம் செய்திருந்தாலும், மதமாற்றம் செய்யும் முயற்சியாகும்' என, கூறி இருந்தனர்.

போலீஸ் நிலையத்துக்கு, திருமணம் செய்து கொண்ட இருவரும் வந்திருந்தனர். அப்போது பெண்ணின் பெற்றோர், தங்கள் மகளை அழைத்து செல்ல முயற்சித்தனர்.ஆனால் அவரோ, கணவருடன் சென்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X