பொது செய்தி

தமிழ்நாடு

சோலார் மின் விளக்கு இங்கே; விளையாட்டு திடல் எங்கே?

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஆர்.கே.பேட்டை : விளையாட்டு திடலுக்கு சோலார் மின்விளக்கு பொருத்தும் திட்டத்தின்கீழ், விளையாட்டு திடல் அல்லாத வேறு பகுதிகளில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், கிராமப்புற இளைஞர்கள்அதிருப்தி அடைந்துஉள்ளனர்.ஊராட்சிகளில், 15 ஆண்டுகளுக்கு முன், ஊரக விளையாட்டு திடல்கள் உருவாக்கப்பட்டன. முறையான பராமரிப்பு இல்லாததால், அந்த திடல்களில் இருந்த விளையாட்டு கருவிகள்

ஆர்.கே.பேட்டை : விளையாட்டு திடலுக்கு சோலார் மின்விளக்கு பொருத்தும் திட்டத்தின்கீழ், விளையாட்டு திடல் அல்லாத வேறு பகுதிகளில் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இதனால், கிராமப்புற இளைஞர்கள்அதிருப்தி அடைந்துஉள்ளனர்.

ஊராட்சிகளில், 15 ஆண்டுகளுக்கு முன், ஊரக விளையாட்டு திடல்கள் உருவாக்கப்பட்டன. முறையான பராமரிப்பு இல்லாததால், அந்த திடல்களில் இருந்த விளையாட்டு கருவிகள் பழுதடைந்துள்ளன. பல இடங்களில் முற்றிலுமாக காணாமல் போய்விட்டன.இந்நிலையில், விளையாட்டு திடல்களில் சோலார் மின்விளக்கு பொருத்தும் திட்டத்தின் கீழ், விளையாட்டு திடல் அல்லாத இடங்களில் சோலார் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. அந்த விளக்கு கம்பங்களில், விளையாட்டு திடல் என குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆர்.கே.பேட்டை அடுத்த, நாகபூண்டி நிழற்குடை அருகே, வீரமங்கலம் கோவில் அருகேயும், விளையாட்டு திடலுக்கான சோலார் மின் விளக்கும் பொருத்தப்பட்டுள்ளது.அதே போல், பள்ளிப்பட்டு ஒன்றியத்தில், சாமந்தவாடா ஆற்றங்கரையிலும், கீச்சலம் அருகே முள்புதரிலும், சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஊரக விளையாட்டு திடல்கள் சீரழிந்துள்ளதால், அம்மையார்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர்கள், தனியாருக்கு சொந்தமான இடத்தில், முட்புதருக்கு மத்தியில் கிரிக்கெட் விளையாடி வருகின்றனர்.காவல் மற்றும் ராணுவத்தில் சேர்ந்து சேவை செய்யும் நோக்கத்துடன், கிராமப்புற இளைஞர்கள் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.ஊரக விளையாட்டு திடல்களை புனரமைத்து, சோலார் விளக்குகளை அங்கு நிறுவினால் பயனுள்ளதாக இருக்கும் என, இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X