பொது செய்தி

தமிழ்நாடு

மக்களை திரட்டி பிரசாரம் வேட்பாளர் வித்தியாசம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், வாடாதவூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர், வீடு வீடாக செல்லாமல் வாக்காளர்களை ஒரே இடத்தில் அழைத்து, 10க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்து பிரசாரம் செய்தார்.லோக்சபா, சட்டசபை, ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களிடம் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பது வழக்கமாக உள்ளது.இதில்,

உத்திரமேரூர் : உத்திரமேரூர் ஒன்றியம், வாடாதவூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர், வீடு வீடாக செல்லாமல் வாக்காளர்களை ஒரே இடத்தில் அழைத்து, 10க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்து பிரசாரம் செய்தார்.

லோக்சபா, சட்டசபை, ஊரக உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், வாக்காளர்களிடம் வீடு வீடாக சென்று ஓட்டு கேட்பது வழக்கமாக உள்ளது.இதில், உத்திரமேரூர் ஒன்றியம், வாடாதவூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் கோகுலகண்ணன், சற்று வித்தியாசமாக கிராம மக்களை ஒன்று திரட்டி, 10க்கும் மேற்பட்ட தேர்தல் வாக்குறுதிகளை அளித்து, தனக்கு ஆதரவு அளிக்குமாறு, கிராமமக்களிடம் பிரசாரம் செய்துள்ளார்.

சாலவாக்கம் ஒன்றிய தே.மு.தி.க., செயலரான இவர், பிரசார துண்டு பிரசுரத்தில், ஊராட்சி தலைவர் பதவிக்கு என்பதை, பணிக்கு போட்டியிடும் எனக்கு 'ஏணி சின்னத்தில் ஓட்டு போடுங்கள். அரசியல் என்பது முழுக்க முழுக்க மக்களுக்கான சேவை தான். உங்களில் ஒருவராக உழைக்க, ஒரு வாய்ப்பு தாருங்கள்' என குறிப்பிட்டுள்ளார்.மேலும் ஊராட்சியில் குடிநீர் வசதி, 10ம் வகுப்பு, பிளஸ் 2வில் அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவ - மாணவியருக்கு ஓராண்டுக்கான முழு படிப்பு செலவை பஞ்சாயத்தே ஏற்றுக்கொள்ளும் உள்ளிட்ட 10 வாக்குறுதிகளை கூறி, பிரசாரம் செய்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X