100 நாள் திட்ட பணிகள் ஆய்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

100 நாள் திட்ட பணிகள் ஆய்வு

Added : அக் 02, 2021
Share
கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றிய பகுதிகளில் நடக்கும் 100 நாள் திட்ட பணியில், மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட தொடுகாடு, நரசிங்கபுரம், பாப்பரம்பாக்கம், புதுவள்ளூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில், நீர்நிலை பராமரிப்பு உள்ளிட்ட பல பணிகள் நடந்து வருகின்றன.இப்பணிகளை, மத்திய குழுவைச் சேர்ந்த

கடம்பத்துார் : கடம்பத்துார் ஒன்றிய பகுதிகளில் நடக்கும் 100 நாள் திட்ட பணியில், மத்திய குழுவினர் நேற்று ஆய்வு செய்தனர்.

கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட தொடுகாடு, நரசிங்கபுரம், பாப்பரம்பாக்கம், புதுவள்ளூர் ஆகிய ஊராட்சி பகுதிகளில், மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை திட்டத்தில், நீர்நிலை பராமரிப்பு உள்ளிட்ட பல பணிகள் நடந்து வருகின்றன.இப்பணிகளை, மத்திய குழுவைச் சேர்ந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சி மற்றும் சமூக கல்வி நிலைய தலைவர் நாராயண ரெட்டி ஆய்வு செய்தார்.மேலும் 100 நாள் திட்ட பணியாளர்களின் பணிகள் குறித்த விபரங்களை கேட்டறிந்தார்.அங்கன்வாடி மையம் மற்றும் சாலை சீரமைப்பு பணிகளை பார்வையிட்டார்; 100 நாள் திட்ட பதிவேடுகளை சரிபார்த்தார்.குழுவினருடன் மண்டல அலுவலர்கள், ஊராட்சி செயலர்கள் உடன் இருந்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X