பொது செய்தி

தமிழ்நாடு

நிரம்பி வழியும் எஸ்.அக்ரஹாரம் ஏரி

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருத்தணி : தொடர் மழை மற்றும் பொன்னை ஏரியின் உபரி நீரால், எஸ்.அக்ரஹாரம் பெரிய ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சில நாட்களாக இரவு நேரத்தில் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வருகிறது.இதனால், நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இது தவிர, ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னை, சோளிங்கர் ஆகிய

திருத்தணி : தொடர் மழை மற்றும் பொன்னை ஏரியின் உபரி நீரால், எஸ்.அக்ரஹாரம் பெரிய ஏரி நிரம்பி வழிகிறது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

திருத்தணி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் சில நாட்களாக இரவு நேரத்தில் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வருகிறது.இதனால், நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இது தவிர, ராணிப்பேட்டை மாவட்டம், பொன்னை, சோளிங்கர் ஆகிய பெரிய ஏரிகள் நிரம்பி, அதன் உபரி நீர் கடைவாசல் வழியாக, திருத்தணி ஒன்றியம், எஸ்.அக்ரஹாரம் பெரிய ஏரிக்கு வருகிறது.

இதனால், நேற்று முன்தினம் இரவு, எஸ்.அக்ரஹாரம் ஏரி முழு கொள்ளளவு எட்டியும், ஏரியில் இருந்து உபரிநீர் கடைவாசல் வழியாக, செருக்கனுார் பெரிய ஏரிக்கு செல்கிறது.தற்போது, செருக்கனுார் பெரிய ஏரியும், 80 சதவீதத்திற்கு தண்ணீர் வந்துள்ளதால், ஓரிரு நாளில் அந்த ஏரியும் நிரம்பி கடைவாசல் வழியாக, உபரி நீர் நந்தியாறுக்கு செல்லும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

ஏரிகள் வேகமாக நிரம்பி வருவதால், எஸ்.அக்ரஹாரம், குடிகுண்டா, செருக்கனுார் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துஉள்ளனர்.விவசாயிகள், இருமுறை நெல் பயிரிடுவதற்கு தேவையான தண்ணீர் ஏரியில் உள்ளதாக விவசாயிகள் தெரிவித்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X