ஜி.எஸ்.டி., வரியை 5 சதவீதமாக குறைக்க மின் விசிறி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஜி.எஸ்.டி., வரியை 5 சதவீதமாக குறைக்க மின் விசிறி உற்பத்தியாளர்கள் வலியுறுத்தல்

Added : அக் 02, 2021
Share
சென்னை : மின் விசிறிகள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி., வரியை, 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்குமாறு, மத்திய அரசுக்கு, இந்திய மின் விசிறி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.74 சதவீதம்இந்திய மின் விசிறி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பில், 'ஓரியன்ட் எலக்ட்ரிக், ஹேவல்ஸ் இந்தியா, கிராம்ப்டன்' உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளனர்.

சென்னை : மின் விசிறிகள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி., வரியை, 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்குமாறு, மத்திய அரசுக்கு, இந்திய மின் விசிறி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

74 சதவீதம்

இந்திய மின் விசிறி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பில், 'ஓரியன்ட் எலக்ட்ரிக், ஹேவல்ஸ் இந்தியா, கிராம்ப்டன்' உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகள் உள்ளனர். அத்தியாவசிய தேவைக்கான சாதனமாக மின் விசிறி உள்ளது.இந்தியாவில் மின் விசிறி பயன்பாட்டில் வீடுகளின் பங்கு, 74 சதவீதம் உள்ளது. மின் விசிறி பிரிவில் 10 லட்சம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர்.

இந்திய மின் விசிறி உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பின் 21வது பொதுக்கூட்டம் நடந்தது. அதில், எரிசக்தி திறன் கொண்ட மின் விசிறிகளுக்கான முக்கிய உற்பத்தி மையமாக இந்தியாவை மாற்றுவதற்கான தொழில் கொள்கை ஏற்படுத்த வலியுறுத்தப்பட்டு உள்ளது.தொழில்நுட்ப முதலீடுமேலும், எரிசக்தி திறன்மிக்க தொழில்நுட்ப முதலீடுகளை விரிவாக்கம் செய்வதற்கு உதவும் வகையில், மின் விசிறிகள் மீது விதிக்கப்படும் ஜி.எஸ்.டி., வரியை, 18 சதவீதத்தில் இருந்து, 5 சதவீதமாக குறைக்குமாறு, அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X