சீன ராணுவத்தில் பணியாற்றும் பாக்., ராணுவ அதிகாரிகள் | Dinamalar

சீன ராணுவத்தில் பணியாற்றும் பாக்., ராணுவ அதிகாரிகள்

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (23)
Share
பீஜிங் : சீன ராணுவத்தின் தலைமையகத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பணியாற்றுவது தெரிய வந்துள்ளது.லடாக் எல்லையில் கடந்த ஆண்டு சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா - சீனா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லையிலிருந்து இரு தரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனினும், கிழக்கு லடாக் எல்லையில் சீன படைகள்

பீஜிங் : சீன ராணுவத்தின் தலைமையகத்தில் பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பணியாற்றுவது தெரிய வந்துள்ளது.



latest tamil news



லடாக் எல்லையில் கடந்த ஆண்டு சீன ராணுவம் அத்துமீறி தாக்குதல் நடத்தியது. இதையடுத்து இந்தியா - சீனா இடையேயான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. லடாக் எல்லையிலிருந்து இரு தரப்பும் படைகளை விலக்கிக் கொள்ள ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. எனினும், கிழக்கு லடாக் எல்லையில் சீன படைகள் இன்னும் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை.


latest tamil news



இந்தியாவுடனான எல்லைப்பகுதியின் பாதுகாப்பை சீன ராணுவத்தின் மேற்கு கமாண்ட் பிரிவு கவனித்து வருகிறது. மேற்கு கமாண்ட் பிரிவின் புதிய கமாண்டராக வாங் ஜைஜாங்கை, சீன ராணுவம் கடந்த மாதம் நியமித்தது.

இந்நிலையில், சீன ராணுவத்தின் மேற்கு மற்றும் தெற்கு கமாண்ட் பிரிவுகளின் தலைமை அலுவலகத்தில், பாகிஸ்தான் ராணுவ அதிகாரிகள் பணியாற்றுவது தெரியவந்துள்ளது.

இரு நாடுகளுக்கு இடையே உள்ள ராணுவ உறவை வலுப்படுத்தும் நோக்கில் அவர்கள் சீன ராணுவத்தில் பணியாற்றுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இரு நாடுகளுக்கு இடையே ராணுவ உறவை மேம்படுத்துவதுடன், பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்குவது தொடர்பாக, பாக்., ராணுவ அதிகாரிகள் சீன ராணுவத்துடன் பேசுவர் என, தகவல்கள் வெளியாகியுள்ளன.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X