சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தாய், மகள் தற்கொலை;மதுராந்தகத்தில் சோகம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
மதுராந்தகம் : மதுராந்தகத்தில் குடும்ப வறுமை காரணமாக தாய், மகள் இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்மதுராந்தகம், பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் சம்சுதீன், 48. இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பேன்சி ஸ்டோர் ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தாஜ்நிஷா, 41, மகள் சஹானா, 17, பிளஸ் 2 முடித்து, நர்சிங் படிக்க முயன்று வந்ததாக கூறப்படுகிறது.சஹானா மேல்படிப்பு

மதுராந்தகம் : மதுராந்தகத்தில் குடும்ப வறுமை காரணமாக தாய், மகள் இருவரும் துாக்கிட்டு தற்கொலை செய்துகொண்டனர்

மதுராந்தகம், பார்த்தசாரதி தெருவைச் சேர்ந்தவர் சம்சுதீன், 48. இவர், அப்பகுதியில் உள்ள தனியார் பேன்சி ஸ்டோர் ஒன்றில் கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி தாஜ்நிஷா, 41, மகள் சஹானா, 17, பிளஸ் 2 முடித்து, நர்சிங் படிக்க முயன்று வந்ததாக கூறப்படுகிறது.சஹானா மேல்படிப்பு மற்றும் குடும்ப செலவுகளுக்கான தேவைகள் குறித்து, சம்சுதீன், அவரது மனைவி தாஜ்நிஷா ஆகியோர் இடையே, அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பேசி கொள்வதில்லை.

இந்நிலையில் நேற்று காலை 8:00 மணிக்கு, சம்சுதீன் வழக்கம் போல் வேலைக்கு சென்று உள்ளார். அப்போது தாஜ்நிஷா, அவரது மகள் சஹானா ஆகியோர், வீட்டில் உள்ள ஊஞ்சல் ஊக்கின் இருபுறங்களிலும், சேலை முனையால் துாக்கிட்டு கொண்டனர். இதற்கிடையே விக்கிரவாண்டியில் இருந்து வந்த தாஜ்நிஷாவின் அம்மா, நேற்று காலை வீட்டுக்கு வந்தபோது, இருவரும் துாக்கில் இறந்த நிலையில் தொங்கினர்.தகவலறிந்த மதுராந்தகம் போலீசார், தாய், மகள் இருவரது சடலத்தையும் மீட்டு, பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பினர். தாஜ்நிஷாவின் கணவர் சம்சுதீனை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X