பொது செய்தி

தமிழ்நாடு

முக்கியத்துவம் வாய்ந்த மண்டல அலுவலரின் பணி

Added : அக் 02, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 101 மண்டல அலுவலர்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்; தேர்தலில் மண்டல அலுவலரின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்லாமல், லோக்சபா, சட்டசபை தேர்தல் என அனைத்து வகையான தேர்தலுக்கும், மண்டல அலுவலர்களின் பணி மிக முக்கியத்துவம் வாய்ந்தது.மண்டல அளவில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு,

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில் 101 மண்டல அலுவலர்கள் ஊரக உள்ளாட்சி தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்; தேர்தலில் மண்டல அலுவலரின் பணி முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் மட்டுமல்லாமல், லோக்சபா, சட்டசபை தேர்தல் என அனைத்து வகையான தேர்தலுக்கும், மண்டல அலுவலர்களின் பணி மிக முக்கியத்துவம் வாய்ந்தது.மண்டல அளவில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு, ஓட்டுப்பெட்டி, ஓட்டுச்சீட்டு, தேர்தல் பொருட்களை அனுப்பி வைப்பதும், ஓட்டுப்பதிவு முடிந்து, எண்ணிக்கை மையத்துக்கு பெற்று வருவதும், மண்டல தேர்தல் அலுவலரின் மிக முக்கிய பொறுப்பு.ஒவ்வொரு மண்டலத்திலும், ஒரு மண்டல தேர்தல் அலுவலர், ஓர் உதவி அலுவலரும் இருப்பர். அவர்களுடன் தலா இரண்டு அலுவலக உதவியாளர்களும் இருப்பர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் 101 மண்டல அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஓட்டுச்சாவடிகளுக்கு, தளவாடங்களை எடுத்துச்செல்லும் சரக்கு வாகனங்கள் மற்றும் மண்டல தேர்தல் அலுவலருக்கான கார் ஆகிய வாகன வசதியை, வட்டார வளர்ச்சி அலுவலகம் ஏற்பாட்டில், தேர்தல் பிரிவினர் செய்துள்ளனர்.மண்டல அளவில் உள்ள ஓட்டுச்சாவடிகளுக்கு சென்று வர, அனைத்து வழித்தடங்களையும் நன்கு தெரிந்து வைத்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.சாலையின் குறுக்கே வரும் ஆறு, ஓடைகள், குளம் போன்ற விபரங்களையும் அறிந்து கொள்ள, தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். மண்டல அலுவலர்கள் ஓட்டுச்சாவடிகளில் அடிப்படை வசதிகள் செய்யப்பட்டதை உறுதி செய்து கொள்வர்.ஓட்டுச்சாவடியில் பயன்படுத்தும் பொருட்களை, ஓட்டுச்சாவடியில் இருக்கும் தலைமை அலுவலர் வசம் மட்டுமே மண்டல அலுவலர்கள் ஒப்படைப்பர். மற்ற எந்த அலுவலரிடமும் ஓட்டுச்சாவடி பொருட்கள் ஒப்படைக்கப்படாது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X