பொது செய்தி

தமிழ்நாடு

'கை துாக்கும்' ஆதரவாளர்கள்

Added : அக் 02, 2021
Share
Advertisement
உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் செல்லும் ஆதரவாளர்களுக்கு, தினமும் சரக்கு, பணம் தந்தே ஆக வேண்டும். அப்போது தான் வேட்பாளரின் பிரசாரம் களை கட்டும்.இவர்களுக்காக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், அதிகளவில் செலவழிக்க வேண்டியிருக்கிறது.ஊராட்சி தலைவர், மாவட்ட கவுன்சிலர் தவிர்த்து வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோரும், அவர்கள் பகுதியில்

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுடன் செல்லும் ஆதரவாளர்களுக்கு, தினமும் சரக்கு, பணம் தந்தே ஆக வேண்டும். அப்போது தான் வேட்பாளரின் பிரசாரம் களை கட்டும்.இவர்களுக்காக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள், அதிகளவில் செலவழிக்க வேண்டியிருக்கிறது.

ஊராட்சி தலைவர், மாவட்ட கவுன்சிலர் தவிர்த்து வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவோரும், அவர்கள் பகுதியில் ஓட்டு கேட்க அழைத்து செல்வோருக்கு மது விருந்து கட்டாயம். சரக்கு கொடுத்தால் தான் செல்வாக்கு என்ற நிலை இருக்கிறது.சில ஊராட்சிகளில் வேட்பாளருக்கு இரவில் போன் போட்டு, 'நாளைக்கு ஓட்டு கேட்க எத்தனை மணிக்கு வர வேண்டும். என்னிடம் நிறைய ஆட்கள் இருக்கின்றனர். அவர்களுக்கு சரக்கு, பிரியாணி கட்டாயம்' என கேட்க ஆரம்பித்துள்ளனர்.

இதேபோல் நெருங்கிய பலரும் கேட்பதால், செய்வதறியாமல் வேட்பாளர்கள் முழிக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க, 'எனக்கு உடல்நிலை சரியில்லை. இன்று பிரசாரம் கிடையாது' என கூறி விடுகின்றனர்.மேலும், 'இருக்கிறவர்களுக்கே சரக்கு வாங்கி கொடுத்து முடியலை. வார்டு உறுப்பினர் பதவியில் பெரிதாக சம்பாதிக்க முடியாது. அதற்கு இவ்வளவு செலவு தேவையா' என கவலையாக பேசி, 'இரண்டு நாளைக்கு பிரசாரம் வேண்டாம். தேர்தலுக்கு முந்தின நாள் பார்த்துக்கலாம்' என அனைவரையும் ஓரங்கட்டி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X