தமிழ்நாடு

விறுவிறு! 782 இடங்களில் இரு வார்டுகளுக்கு ஒரு 'பூத்'

Added : அக் 02, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள, 1,281 ஓட்டுச்சாவடிகளில், 782 ஓட்டுச்சாவடிகள் இரண்டு வார்டுகளுக்கு பொதுவாக அமைகின்றன. அதுபோன்ற ஓட்டுச்சாவடியில், கூடுதலாக நீல நிற ஓட்டுச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், 6ம் தேதி முதற்கட்டமாகவும்,

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மொத்தமுள்ள, 1,281 ஓட்டுச்சாவடிகளில், 782 ஓட்டுச்சாவடிகள் இரண்டு வார்டுகளுக்கு பொதுவாக அமைகின்றன. அதுபோன்ற ஓட்டுச்சாவடியில், கூடுதலாக நீல நிற ஓட்டுச்சீட்டுகள் வழங்கப்பட உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல், 6ம் தேதி முதற்கட்டமாகவும், 9ல் இரண்டாம் கட்டமாகவும் நடக்கிறது.தேர்தல் பிரசாரம் வரும் 4ம் தேதியுடன் முடிவடைகிறது. எனவே, கிராமப்புறங்களில் வேட்பாளர்கள் தீவிரமாக பிரசாரம் மேற்கொண்டு வருகின்றனர்.


கண்காணிப்பு


காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம், தேர்தல் பணிக்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றது.குறிப்பாக, கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ள கூட்டுறவு அச்சகத்தில் ஓட்டுச்சீட்டு அச்சடிக்கும் பணி விறுவிறுப்பாக நடக்கிறது.மாவட்ட கவுன்சிலர் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, 13 லட்சத்து 63 ஆயிரத்து 462 ஓட்டுச்சீட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன.

அதேபோல் ஊராட்சி தலைவருக்கு, 7 லட்சத்து 10 ஆயிரத்து 500 ஓட்டுச்சீட்டுகளும், வார்டு உறுப்பினர் பதவிக்கு, 6 லட்சத்து 99 ஆயிரத்து 150 ஓட்டுச்சீட்டுகள் அச்சடிக்கப்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில், 1,281 ஓட்டுச்சாவடிகள் இத்தேர்தலில் அமைக்கப்படுகின்றன. இவற்றை 94 மண்டலங்களாக பிரித்து, அனைத்து வகையான பொருட்களையும் ஓட்டுச்சாவடிகளுக்கு அனுப்ப, வாகன வசதிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மொத்தமுள்ள ஓட்டுச்சாவடிகளில், 255 ஓட்டுச்சாவடிகள் பதற்றமானவையாக கண்டறியப்பட்டு உள்ளன. இவற்றில், 85 ஓட்டுச்சாவடிகள் வெப் கேமரா மூலமாகவும், 89 ஓட்டுச்சாவடிகள் நுண் பார்வையாளர்கள் மூலமாகவும், 81 ஓட்டுச்சாவடிகள் புகைப்பட ஒளிப்பதிவாளர்களாலும் கண்காணிக்கப்பட உள்ளன.


அவகாசம்


பதற்றமான ஓட்டுச்சாவடிகளில், 210 ஓட்டுச்சாவடிகள் மாவட்ட காவல் எல்லையில் உள்ளன. மீதமுள்ள, 45 ஓட்டுச்சாவடிகள் மாநகர காவல் எல்லையில் உள்ளன. மேலும், 88 பெண்கள் ஓட்டுச்சாவடிகள் அமைக்கப்படுகின்றன.தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் தபால் ஓட்டளிக்க, படிவம் 15, பயிற்சியின்போதே வழங்கப்பட்டுஉள்ளது.அவற்றை பூர்த்தி செய்து, தேர்தல் பணியில் ஈடுபடும் அரசு ஊழியர் பெயர் இடம் பெற்றுள்ள ஊராட்சியிலிருந்து ஓட்டுச்சீட்டு பெற்று, தபால் ஓட்டளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஓட்டு எண்ணும் நாள் காலை 8:00 மணி வரை, தபால் ஓட்டளிக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பிற மாவட்டங்களைச் சேர்ந்த அரசு ஊழியர்கள், காஞ்சிபுரம் மாவட்டத்தில் பணியாற்றினால், அவர்கள் தேர்தல் பணி சான்றுடன், அவருடைய பெயர் இடம் பெற்றுள்ள உள்ளாட்சி பகுதியின் விபரத்தை தேர்தல் நடத்தும் அலுவலரிடம் விண்ணப்பித்து, தபால் ஓட்டளிக்கலாம்.தொற்று உள்ளவர்கள்கொரோனா வைரஸ் தொற்று உள்ளவர்கள், தேர்தல் நாளன்று, மாலை 5:00 மணி முதல் 6:00 மணி வரை ஓட்டளிக்கலாம்.

தனியார் தொழிற்சாலைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு, தேர்தலன்று சம்பளத்துடன் விடுமுறை அளிக்க, அரசு உத்தரவிட்டுள்ளது.ஓட்டு எண்ணும் ஐந்து மையங்களிலும், ஓட்டு எண்ணிக்கைக்கு முந்தைய நாள் முதல், ஓட்டு எண்ணும் நாள் வரை, 24 மணி நேரமும், கண்காணிப்பு கேமராக்கள் வைத்து பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.


நீல நிறத்தில் ஓட்டுச்சீட்டுகள்


காஞ்சிபுரம் மாவட்டத்தில், மொத்தமுள்ள 1,281 ஓட்டுச்சாவடிகளில் 782 ஓட்டுச்சாவடிகள், இரண்டு வார்டுகளுக்கு ஒரு ஓட்டுச்சாவடிகளாக அமைகின்றன. அதாவது, வார்டு உறுப்பினர் பதவிக்கு, இரண்டு வார்டுகளுக்கு தனித்தனி ஓட்டுச்சாவடியாக இல்லாமல், ஒரே ஓட்டுச்சாவடியாக அமையும். அதுபோன்ற ஓட்டுச்சாவடிகளில் வித்தியாசம் காண, நீல நிற ஓட்டுச்சீட்டுகள் வழங்கப்படும். அவ்வாறு 1.86 லட்சம் ஓட்டுச்சீட்டுகள் அச்சடிக்கப்பட்டு நீல நிறத்தில், வாக்காளர்களுக்கு கொடுக்கப்படும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X