பொது செய்தி

தமிழ்நாடு

வட்டி கடையில் கொட்டுது

Added : அக் 02, 2021
Share
Advertisement
காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், எப்படியாவது பதவியை பிடித்தாக வேண்டும் என, தேர்தல் முறைகேடாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணிகளில் தற்போதே ஈடுபட துவங்கியுள்ளனர்.அவ்வாறு பணம்

காஞ்சிபுரம் மாவட்ட உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளனர்.வார்டு உறுப்பினர், ஊராட்சி தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு போட்டியிடும் வேட்பாளர்கள், எப்படியாவது பதவியை பிடித்தாக வேண்டும் என, தேர்தல் முறைகேடாக வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கும் பணிகளில் தற்போதே ஈடுபட துவங்கியுள்ளனர்.அவ்வாறு பணம் கொடுக்க போதிய வசதியில்லாத வேட்பாளர்கள் சிலர், தங்களுடைய நகை, சொத்து போன்றவற்றை அடமானம் வைத்து, தங்கள் பிரசார செலவு, ஓட்டுக்கு பணம் ஆகியவற்றை சமாளித்து வருகின்றனர்.

சொத்துக்களை வங்கியிலோ அல்லது தனியார் நிதி நிறுவனங்களிலோ அடமானம் வைக்க பல்வேறு நடைமுறைகள் இருப்பதாலும், பல நாட்கள் ஆகும் என்பதாலும், சொந்த ஊரில் உள்ளவர்களிடமும், அடகு கடைகளிலும் அடமானம் வைத்து பணம் வாங்கி கொள்கின்றனர்.வேட்பாளர்களின் அவசர தேவையை அறிந்த வசதி படைத்தவர்கள், 100க்கு 4 முதல் 5 ரூபாய் வரையிலான சதவீதத்தில் வட்டி வசூலிக்கின்றனர்.தேர்தலில் ஜெயித்த பின், பல வகையில் வரும் வருமானத்தால் சொத்துக்களை மீட்டுக் கொள்ளலாம் என்ற அசாத்திய நம்பிக்கையில், வேட்பாளர்களும் அதை பற்றி கவலைப்படாமல் வாங்கி செல்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X