பொது செய்தி

தமிழ்நாடு

மாமல்லை தனியார் கல்லுாரியில் ஓட்டு எண்ணும் மையம் அமைப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
மாமல்லபுரம் : மாமல்லபுரம் தனியார் கல்லுாரியில், திருக்கழுக்குன்றம் ஒன்றிய பகுதி, ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது.மாமல்லபுரம் புறவழிப்பாதையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியில், இம்மையம், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைக்கப்படுகிறது.திருக்கழுக்குன்றம் ஒன்றிய பகுதியின் இரண்டு மாவட்ட கவுன்சிலர், 26 ஒன்றிய கவுன்சிலர், 54 ஊராட்சி தலைவர், 408 ஊராட்சி

மாமல்லபுரம் : மாமல்லபுரம் தனியார் கல்லுாரியில், திருக்கழுக்குன்றம் ஒன்றிய பகுதி, ஓட்டு எண்ணும் மையம் அமைக்கப்படுகிறது.

மாமல்லபுரம் புறவழிப்பாதையில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லுாரியில், இம்மையம், பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் அமைக்கப்படுகிறது.திருக்கழுக்குன்றம் ஒன்றிய பகுதியின் இரண்டு மாவட்ட கவுன்சிலர், 26 ஒன்றிய கவுன்சிலர், 54 ஊராட்சி தலைவர், 408 ஊராட்சி வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகளுக்கு, அக்., 6ல் ஓட்டுப்பதிவு நடத்தி, அக்., 12ல், இக்கல்லுாரியில் ஓட்டு எண்ணப்படுகிறது.

இதற்காக, ஓட்டுப்பெட்டிகளை வைத்து பாதுகாக்கும் அறைகளின் ஜன்னல்கள் மூடப்பட்டு, ஓட்டு எண்ணும் அறைகளில் தேர்தல் ஊழியர்கள், வேட்பாளர்கள் மற்றும் முகவர்களை தனித்தனியே பிரிக்கும் கம்பிவலை தடுப்பு, கண்காணிப்பு கேமராக்கள், சவுக்கு தடுப்பு ஆகியவை அமைக்கப்படுகின்றன.

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக மாமல்லலை டி.எஸ்.பி., ஜெகதீஸ்வரன் தலைமையிலான போலீசார், திருப்போரூர் ஒன்றியத்தில் அடங்கிய செங்காடு, இள்ளலுார் பகுதிகளில், தேர்தல் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணியை, நேற்று நடத்தினர்.திருப்போரூர் ஓ.எம்.ஆர்., இணைப்பு சாலையில் அணிவகுப்பை துவங்கி ரவுண்டானா பகுதியில் முடித்தனர். பாதுகாப்பு பணி குறித்து ஆலோசனை வழங்கப்பட்டது. இதில் 250 போலீசார் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X