பொது செய்தி

தமிழ்நாடு

தங்க நகை பரிவர்த்தனை 'மலபார் கோல்டு' வரவேற்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை: நாட்டில் தங்க நகை பரிவர்த்தனைக்கான கட்டமைப்பை அனுமதிக்கும், 'செக்யூரிட்டீஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா'வின் முடிவை, 'மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ்' நிறுவன தலைவர் எம்.பி. அகமது வரவேற்று உள்ளார்.இதுகுறித்து எம்.பி. அகமது கூறியதாவது :தங்க நகை பரிமாற்றத்துக்கு, 'செபி'யின் அனுமதி கிடைத்துள்ளதால், ஒளிவு மறைவற்ற விலை கண்டுபிடிப்பு, முதலீட்டு

சென்னை: நாட்டில் தங்க நகை பரிவர்த்தனைக்கான கட்டமைப்பை அனுமதிக்கும், 'செக்யூரிட்டீஸ் அண்டு எக்ஸ்சேஞ்ச் போர்டு ஆப் இந்தியா'வின் முடிவை, 'மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ்' நிறுவன தலைவர் எம்.பி. அகமது வரவேற்று உள்ளார்.

இதுகுறித்து எம்.பி. அகமது கூறியதாவது :தங்க நகை பரிமாற்றத்துக்கு, 'செபி'யின் அனுமதி கிடைத்துள்ளதால், ஒளிவு மறைவற்ற விலை கண்டுபிடிப்பு, முதலீட்டு வாய்ப்பு, தரமான தங்கம் கிடைப்பது உறுதி செய்யப்படும். நாடு முழுவதும், ஒரே சீரான தங்க ஆபரண விலை அமலாவது, இதன் வாயிலாக சாத்தியமாகும்; இத்தொழிலில் முதலீடு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஒவ்வொரு ஆண்டும், 800 முதல் 900 டன் தங்கம், நம் நாட்டில் இறக்குமதி செய்யப்படுகிறது. மலபார் கோல்டு அண்டு டைமண்ட்ஸ் நிறுவனமானது, 'ஒரு இந்தியா, ஒரே தங்க விலை' என்ற விற்பனை உத்தியை அறிமுகம் செய்தது. நாடு முழுவதிலும் அமைந்துள்ள எங்கள் சில்லறை விற்பனை நிலையங்களில், 100 சதவீதம் ஹால்மார்க் ஆபரணங்களுக்கு ஒரே விலை தான் விதிக்கப்படுகிறது. தங்கம் வர்த்தகத்தில் ஒளிவு மறைவற்ற நிலை இருக்க வேண்டும் என, 'செபி' தெரிவித்துள்ளது. இந்த முடிவை வரவேற்கிறோம். அதே சமயம், நாட்டில் அதிகாரபூர்வமற்ற ஆபரண உற்பத்தி நடப்பதை தடுத்தாக வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X