தமிழகத்தை சேர்ந்த பெண் டில்லியில் மர்ம மரணம்; இன்றைய 'கிரைம் ரவுண்ட் அப்'

Updated : அக் 03, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்:சாலை விபத்து: 7 பேர் பலிபோபால்: மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டம் கோஹட் அருகே நேற்று காலை உத்தரப்பிரதேசம் நோக்கிச் சென்ற பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் பலியாயினர். காயமடைந்த 13 பேர் குவாலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.பயங்கரவாதி சுட்டுக்கொலைஸ்ரீநகர்: ஜம்மு -
crime, Murder, arrest


இந்திய நிகழ்வுகள்:



சாலை விபத்து: 7 பேர் பலி


போபால்: மத்தியப் பிரதேசத்தின் பிந்த் மாவட்டம் கோஹட் அருகே நேற்று காலை உத்தரப்பிரதேசம் நோக்கிச் சென்ற பஸ் எதிரே வந்த லாரி மீது மோதியது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே ஏழு பேர் பலியாயினர். காயமடைந்த 13 பேர் குவாலியர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.


பயங்கரவாதி சுட்டுக்கொலை


ஸ்ரீநகர்: ஜம்மு - காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் லஷ்கர் - இ - தொய்பா பயங்கரவாதிகளுடன் இணைந்து செயல்பட்ட ஷமிம் சோபி என்பவரை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப் பட்டன.ஷோபியான் மாவட்டம் ரக்மா கிராமத்தில் பதுங்கி இருந்த பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்தனர். இரு தரப்பினருக்கும் இடையிலான துப்பாக்கிச் சண்டையில் பயங்கரவாதி ஒருவர் கொல்லப்பட்டார். அவரை அடையாளம் காணும் பணி தொடர்கிறது.


பனிச்சரிவில் சிக்கிய 5 வீரர்கள் மாயம்


புதுடில்லி: உத்தரகண்ட் மாநிலத்தில் மலையேற்றத்தின்போது பனிச்சரிவில் சிக்கி மாயமான ஐந்து கடற்படை வீரர்களை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது.

இந்திய கடற்படை வீரர்கள் 20 பேர், உத்தரகண்ட் மாநிலத்தின் திரிசூல் மலை உச்சிக்கு செல்ல முடிவு செய்தனர். அவர்களின் பயணம் கடந்த மாதம் 3ல் துவங்கியது. அவர்களில் 10 பேர், பனி படர்ந்த திரிசூல் மலை உச்சிக்கு செல்லும் தங்கள் பயணத்தை துவங்கினர். அவர்களில் ஐந்து பேர் பனிச்சரிவில் சிக்கி திடீரென மாயமாயினர். அவர்களை தேடும் பணிகளில் ராணுவம், விமானப்படை மற்றும் பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டு உள்ளதாக, கடற்கடை தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.


கல்லுாரி மாணவி கொலை


கோட்டயம்: கேரளாவின் கோட்டயத்தில் பால் செயின்ட் தாமஸ் கல்லுாரி மாணவர் அபிஷேக், 21. கூத்தாட்டுக்குளத்தைச் சேர்ந்த இவர், தன்னுடன் படிக்கும் வைக்கம் பகுதியைச் சேர்ந்த நித்தினாவை, நேற்று கத்தியால் குத்திக்கொலை செய்தார். இருவரும் நெருக்கமாக பழகியவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.


தமிழகத்தைச் சேர்ந்த பெண் டில்லியில் மர்ம மரணம்


புதுடில்லி: டில்லியில் உள்ள ஒரு வீட்டில் வேலை பார்த்த தமிழகத்தைச் சேர்ந்த இளம்பெண், மர்மமாக இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள மதராசி காலனியில் அதிக அளவில் தமிழர்கள் வசிக்கின்றனர். இங்கு தாயுடன் வசித்த, 21 வயதான இளம்பெண், லஜ்பத் நகர் பகுதியில் ஒரு வீட்டில் வேலை பார்த்தார். இவர் தமிழகத்தின் கள்ளக்குறிச்சியைச் சேர்ந்தவர். பல ஆண்டுகளுக்கு முன்பே, இவர்களது குடும்பத்தினர் டில்லியில் குடியேறி விட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் அந்த இளம்பெண் வழக்கம் போல் நேற்று காலை, தான் வேலை பார்க்கும் வீட்டிற்கு சென்றார். சிறிது நேரத்திலேயே அந்த பெண் மின்சாரம் பாய்ந்து இறந்ததாக, அந்த வீட்டின் உரிமையாளர்கள் போலீஸ் ஸ்டேஷனுக்கு தகவல் கொடுத்தனர். இளம்பெண் உடலில் தீக்காயங்கள் இருப்பதை பார்த்த போலீசார், பிரேத பரிசோதனைக்காக உடலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து டில்லி போலீசார் விசாரித்து வருகின்றனர்.


latest tamil news




தமிழக நிகழ்வுகள்:



தந்தை கொலை: மகன் கைது


நாகர்கோவில்: குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே மேலகிருஷ்ணன் புதுாரைச் சேர்ந்தவர் சிவலிங்கம், 74. நான்கு மகள்கள், இரண்டு மகன்கள். மூத்த மகன் ஜெயபால், ஈத்தாமொழி போலீஸ் ஸ்டேஷனில் சிறப்பு எஸ்.ஐ.,யாக இருக்கிறார்.இரண்டாவது மகன் அச்சுதன், 38; குடி பழக்கம் கொண்ட இவருக்கு திருமணமாகவில்லை. அடிக்கடி தாய், தந்தையிடம் தகராறு செய்வது வழக்கம். இரண்டு நாட்களுக்கு முன் தகராறு செய்த அச்சுதன், தந்தையை தாக்கியதில் படுகாயமடைந்து, ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு நேற்று இறந்தார். சுசீந்திரம் போலீசார், அச்சுதனை கைது செய்தனர்.


மின்சாரம் தாக்கி தந்தை, இரண்டு மகன்கள் பலி


திண்டுக்கல்: துணி உலர்த்தும் போது, கம்பியில் மின்சாரம் பாய்ந்ததில் தந்தை, இரண்டு மகன்கள் பரிதாபமாக பலியாயினர்.

திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகே செட்டியபட்டியைச் சேர்ந்த கூலித் தொழிலாளி திருப்பதி, 48. இவரது மகன்கள் விஜய்கணபதி, 17; பிளஸ் 2, சந்தோஷ்குமார், 15; பத்தாம் வகுப்பும் படித்தனர்.நேற்று காலை மனைவி வசந்தா, 40, வேலைக்கு சென்று விட்டார். திருப்பதி, வீட்டின் முன் இருந்த கம்பியில், துணி உலர்த்த முயன்றார். வீட்டு மின் ஒயருடன் அந்த கம்பி உரசியதில் திருப்பதி மீது மின்சாரம் பாய்ந்தது. அவரை காப்பாற்ற முயன்ற, இரு மகன்களும் உடலில் மின்சாரம் பாய்ந்து கதறினர்.சத்தம் கேட்டு வந்த பக்கத்து வீட்டுக்காரர் முருகன், 38; அவரது மனைவி சூர்யா, 26, ஆகியோர் மின் கம்பியை பிடித்தபடி கதறிக் கொண்டிருந்த மூவரையும் மரக்கட்டையால் விடுவிக்க முயன்றனர். இதில், ஐந்து பேரும் துாக்கி வீசப்பட்டனர். திருப்பதியும், அவரது மகன்களும் சம்பவ இடத்திலேயே இறந்தனர். காப்பாற்ற முயன்ற முருகன், சூர்யா காயங்களுடன் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.


மகளை கொன்ற தந்தை


ராமநாதபுரம் மாவட்டம், கமுதி அருகே தோப்படைப்பட்டியைச் சேர்ந்தவர் அழகேஸ்வரி, 30; கணவரை பிரிந்து, 10 ஆண்டுகளாக தந்தை ஆதி, 60 வீட்டில் வசித்தார். இரண்டு மகள்கள் உள்ளனர். அழகேஸ்வரி நடத்தையில் சந்தேகப்பட்டு, தந்தை ஆதி கண்டித்தார்.பேரையூர் குண்டாறு அருகே தோட்டத்தில் வேலை செய்த அழகேஸ்வரியை, நேற்று மதியம் ஆதி அரிவாளால் வெட்டிக் கொலை செய்தார். பின், போலீசில் சரண் அடைந்தார்.


உலக நிகழ்வுகள்:



மருத்துவமனையில் தீ; 9 பேர் பலி


புகரெஸ்ட்: தென்கிழக்கு ஐரோப்பிய நாடான ருமேனியாவில் மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்தனர். ருமேனியாவின் துறைமுக நகரமான கன்ஸ்டண்டாவில் உள்ள ஒரு மருத்துவமனையில் நேற்று அதிகாலையில் தீ விபத்து ஏற்பட்டது. அங்கிருந்த நோயாளிகள் உடனடியாக வெளியேற்றப்பட்டனர். ஆனால் ஒன்பது பேர் தீயில் சிக்கி உயிரிழந்தனர். விபத்து நடந்த போது தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த 10 பேர் உட்பட மொத்தம் 113 நோயாளிகள் அந்த மருத்துவமனையில் இருந்தனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
P Ravindran - Chennai,இந்தியா
02-அக்-202116:23:09 IST Report Abuse
P Ravindran இங்கு இருக்கும் வெளி மாநிலத்தவர் எத்தனை பேர் இங்கு மர்ம மரணம் அடைகிறார்கள் என்று கணக்கு இருக்கிறதா. இறப்பிலும் மொழியை போடாதீர்கள் கேவலமான செயல்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X