இது என்ன பண்ருட்டியில் பலாப்பழம் விக்கிற விவகாரமா... தமிழக அரசால் மட்டும் எதுவும் செய்ய முடியாது...

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை: காவிரி நீரை தமிழகத்திற்கு பிச்சை போடுகிறதா காவிரி மேலாண்மை ஆணையம்... அந்த ஆணையத்தை கலைத்து விட்டு, தன்னாட்சி அதிகாரமுள்ள ஆணையத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இது என்ன பண்ருட்டியில் பலாப்பழம் விக்கிற விவகாரமா... இரு மாநில முக்கிய விவகாரம். தமிழக அரசால் மட்டும் எதுவும் செய்ய
இது என்ன பண்ருட்டியில் பலாப்பழம் விக்கிற விவகாரமா... தமிழக அரசால் மட்டும் எதுவும் செய்ய முடியாது...

தமிழக வாழ்வுரிமை என்ற கட்சியின் தலைவர் வேல்முருகன் அறிக்கை: காவிரி நீரை தமிழகத்திற்கு பிச்சை போடுகிறதா காவிரி மேலாண்மை ஆணையம்... அந்த ஆணையத்தை கலைத்து விட்டு, தன்னாட்சி அதிகாரமுள்ள ஆணையத்தை அமைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.


இது என்ன பண்ருட்டியில் பலாப்பழம் விக்கிற விவகாரமா... இரு மாநில முக்கிய விவகாரம். தமிழக அரசால் மட்டும் எதுவும் செய்ய முடியாது!நாம் தமிழர் என்ற கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை: முதல்வர் வரும் நேரத்தில் போராடிய செவிலியரை தாக்கிய போலீசாரின் போக்கு கண்டனத்திற்குரியது. தொகுப்பூதிய பணியாளர்களாக உள்ள அனைத்து செவிலியர்களையும் தமிழக அரசு உடனடியாக பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.


கொரோனா தொற்று குறைந்துள்ளதால், சுகாதாரத்துறையினருக்கு 'குளிர்விட்டுப்' போனதோ... செவிலியர் பணி நிரந்தரம் எப்போதும் அவசியம்!தமிழக பா.ஜ., பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் அறிக்கை: பிரதமர் மோடியை நேரடியாக எதிர்க்க 'சரக்கு' இல்லாமல் போலியாக, 'போட்டோஷாப்' படங்களை போட்டு எதிர்ப்பை காட்டும் நிலைக்கு எதிர்க்கட்சிகள் வந்து விட்டன. செயற்கையான எதிர்ப்பு என்றும் வெற்றி பெறாது.


latest tamil news
'போட்டோஷாப்' செய்யப்பட்ட படங்களை வெளியிட்டு, பிரதமருக்கு அவப்பெயர் உண்டாக்க முயற்சித்தவர்களின் முயற்சி வெற்றியடையவில்லை என்பது அவர்களின் முயற்சியிலேயே தெரிய வருகிறது!யாதவ மகாசபை தலைவர் தேவநாதன் யாதவ் அறிக்கை: கொரோனா தொற்று குறைந்ததாக சொல்லி, பல தளர்வுகளை தமிழக அரசு அவ்வப்போது அளிக்கிறது. எனினும், வழிபாட்டு தலங்களை வார இறுதி நாட்களில் திறக்க மறுக்கிறது. மது தரும் வருமான போதையில் வழிபாட்டு தலங்கள் கண்ணுக்கு தெரியவில்லையா?


டாஸ்மாக் மதுபான கடைகளை மூடினால் கொந்தளிப்பு அதிகமாக இருக்கும்; கோவில்களை மூடியிருப்பதால், அந்த அளவுக்கு இருக்காது என அரசு நினைக்கிறதோ?தி.மு.க., செய்தி தொடர்பாளர் கவிஞர் சல்மா அறிக்கை: ஹிந்து கோவிலுக்கு சென்று ஓட்டு கேட்டேன் என்பதற்காக தேர்தலில் என்னை தோற்கடித்தனர். அது தான் இங்கே உள்ள பிரச்னை. அனைத்து சமூகத்தினருடனும் ஒன்றாக சென்று பயணிக்கதாவரை எந்த ஒரு சமூகமும் முன்னேற்றம் அடைய முடியாது. சமூக நல்லிணக்கம் என்பது நமது அடையாளம்!


உண்மை தான். இதை உரக்க சொல்லுங்கள்!மார்க்சிஸ்ட் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணன் அறிக்கை: தென்னக ரயில்வேயில், 51 ரயில் ஓட்டுனர் காலியிடங்களுக்கு, உ.பி.,யின் கோரக்பூர் தேர்வாணையத்திலிருந்து 54 பேர் பட்டியலை வாங்கிய நடவடிக்கையை மார்க்சிஸ்ட் கடுமையாக எதிர்த்தது. அதனால், கோரக்பூர் தேர்வாளர் பட்டியல் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது.


போகிற போக்கை பார்த்தால், தமிழகம் தாண்டி ரயில்களை இயக்கக் கூடாது என்று கூட, மாநில கம்யூ.,க்கள் கொடி பிடிப்பர் போலிருக்கிறதே!


Advertisement


வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
03-அக்-202102:08:52 IST Report Abuse
BASKAR TETCHANA இவன் பலாப்பழம் விற்ககூட லாயக்கில்லாதவன். எதோ நிலக்கரி தொழிற் சங்கத்தினர் போடுகின்ற பிச்சையில் வாழ்ந்து வந்தான். இப்போது ஸ்டாலினுக்கு தூபம் போட்டு அவனின் ஆதரவுடன் எம்.எல்.எ. ஆகி விட்டான். மக்களுக்கு இதுவரை ஒன்றும் செய்யவில்லை.
Rate this:
Cancel
Arulmurugan -  ( Posted via: Dinamalar Android App )
02-அக்-202117:59:04 IST Report Abuse
Arulmurugan recruit board available in South region
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
02-அக்-202114:24:52 IST Report Abuse
sankaseshan மோடியை எதிர்க்க ஆளில்லை இன்றய நிலவரம், ஆட்சி மாறும் பொது நீ கவலைப்படு அப்பு அதுவரை கம்முன்னு கிட
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X