பொது செய்தி

தமிழ்நாடு

அந்தியூரில் சூறாவளி காற்று: 500 வாழை மரங்கள் சேதம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
அந்தியூர்: அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை, பலத்த மழை கொட்டியது. சில இடங்களில் சூறாவளி போல் காற்று வீசியது. சின்னத்தம்பிபாளையத்தில் கரட்டுத்தோட்டத்தை சேர்ந்த ராமசாமி தோட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட நேந்திரம் ரக வாழை மரங்கள் முறிந்தன. இதேபோல் சங்கராப்பாளையம் அருகே சுமைதாங்கியை சேர்ந்த ராஜாவுக்கு சொந்தமான, 300க்கும்

அந்தியூர்: அந்தியூர் சுற்று வட்டார பகுதிகளில், நேற்று முன்தினம் மாலை முதல் இரவு வரை, பலத்த மழை கொட்டியது. சில இடங்களில் சூறாவளி போல் காற்று வீசியது. சின்னத்தம்பிபாளையத்தில் கரட்டுத்தோட்டத்தை சேர்ந்த ராமசாமி தோட்டத்தில், நூற்றுக்கும் மேற்பட்ட நேந்திரம் ரக வாழை மரங்கள் முறிந்தன. இதேபோல் சங்கராப்பாளையம் அருகே சுமைதாங்கியை சேர்ந்த ராஜாவுக்கு சொந்தமான, 300க்கும் மேற்பட்ட கதலி ரக வாழைகள் அடியோடு சாய்ந்தன. இதில்லாமல் பல இடங்களில் வாழை மரங்கள் சேதமடைந்ததால், விவசாயிகள் சோகம் அடைந்தனர். இதேபோல் புதுப்பாளையம் உள்ளிட்ட இடங்களில், மக்காசோள பயிர் சேதமடைந்தது. உரிய இழப்பீடு வழங்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X