பொது செய்தி

தமிழ்நாடு

மாமனார், கொழுந்தனார் கொடுமை: கணவனை இழந்த பெண் புகார்

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஈரோடு: ஈரோடு, கங்கா நகர், இந்திரா நகரை சேர்ந்தவர் ரம்யா, 26; ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், இவர் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த குமரேசன், 35; நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கிருஷ்ணகிரியில் வசித்தோம். ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஜூன், 1ல் கணவர் கொரோனாவால் இறந்தார். இதையடுத்து மாமனார் வெங்கடப்பன், என்னை

ஈரோடு: ஈரோடு, கங்கா நகர், இந்திரா நகரை சேர்ந்தவர் ரம்யா, 26; ஈரோடு எஸ்.பி., அலுவலகத்தில், இவர் நேற்று அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனது கணவர் கிருஷ்ணகிரியை சேர்ந்த குமரேசன், 35; நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. கிருஷ்ணகிரியில் வசித்தோம். ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. கடந்த ஜூன், 1ல் கணவர் கொரோனாவால் இறந்தார். இதையடுத்து மாமனார் வெங்கடப்பன், என்னை கொடுமைப்படுத்த தொடங்கினார். கணவரின் தம்பி சுரேஷ், அவர் மனைவியும் சேர்ந்து கொண்டு மிரட்டவே, பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டேன். கணவர் எல்.ஐ.சி., பாலிசி போட்டிருந்தார். நல வாரியத்தில் உறுப்பினராகவும் இருந்தார். இரண்டு லட்சம் ரூபாய் சீட்டிலும் சேர்ந்திருந்தார். இவை எனக்கு கிடைத்து விடும் என்பதால், திட்டமிட்டு என்னை வீட்டை விட்டு விரட்டி விட்டனர். மேலும் எனது, 20 பவுன் நகையையும் அபகரித்து கொண்டனர். இதில் விசாரணை நடத்தி, மாமனார், கொழுந்தனார், அவர் மனைவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனக்கு கிடைக்க வேண்டிய பணம், நகைகளை மீட்டுத்தர வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X