பொது செய்தி

தமிழ்நாடு

புலிகள் காப்பகத்தில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

Added : அக் 02, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: வன விலங்கு வாரவிழாவை முன்னிட்டு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, புகைப்பட கண்காட்சி நடந்தது. சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, மாவட்ட வன அலுவலர் கிருபா சங்கர் தொடங்கி வைத்தார். இதில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசைக் கருவிகளான பீனாட்சி வாத்திய இசைக்கருவிகள்

புன்செய்புளியம்பட்டி: வன விலங்கு வாரவிழாவை முன்னிட்டு, சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில், விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி, புகைப்பட கண்காட்சி நடந்தது. சத்தியமங்கலம் மாவட்ட வன அலுவலகத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை, மாவட்ட வன அலுவலர் கிருபா சங்கர் தொடங்கி வைத்தார். இதில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசைக் கருவிகளான பீனாட்சி வாத்திய இசைக்கருவிகள் வாசிக்கப்பட்டன. அலுவலக வளாகத்தில் வனவிலங்குகளின் புகைப்படங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இவற்றை மக்கள் கண்டு ரசித்தனர். இதைத்தொடர்ந்து புலிகள் உள்ளிட்ட வன விலங்குகள் குறித்து, பறை இசையுடன் ஆடல் பாடல் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி நடந்தது. வனவிலங்கு வார விழாவையொட்டி அரசு பள்ளிகளில் நடந்த பேச்சு, கட்டுரை, ஓவிய போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியருக்கு மாவட்ட வன அலுவலர், பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X