ஈரோடு பள்ளி மைதானத்தில் குவித்த மண்ணால் அபாயம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஈரோடு பள்ளி மைதானத்தில் குவித்த மண்ணால் அபாயம்

Added : அக் 02, 2021
Share
ஈரோடு: ஈரோடு காமராஜர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், காய்கறி மார்க்கெட் குப்பை, கொட்டப்பட்ட மண்ணை அகற்ற வலியுறுத்தி, கலெக்டர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், முதல்வர் ஸ்டாலினுக்கு, ஈரோடு வக்கீல் லோகநாதன் மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் வளாகத்தை இடித்துவிட்டு, நவீன வளாகமாக கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக

ஈரோடு: ஈரோடு காமராஜர் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில், காய்கறி மார்க்கெட் குப்பை, கொட்டப்பட்ட மண்ணை அகற்ற வலியுறுத்தி, கலெக்டர், பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ், முதல்வர் ஸ்டாலினுக்கு, ஈரோடு வக்கீல் லோகநாதன் மனு அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: ஈரோடு நேதாஜி காய்கறி மார்க்கெட் வளாகத்தை இடித்துவிட்டு, நவீன வளாகமாக கட்டும் பணி நடந்து வருகிறது. இதற்காக அங்கிருந்த கட்டடங்களை இடித்தனர். அந்த இடிபாடுகள், மண் கழிவுகளை, ஈரோடு காமராஜர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் கொட்டி வைத்துள்ளனர். பள்ளி குழந்தைகள் ஒரு மாதமாக படிக்க வருகின்றனர். இச்சூழலில் மைதானத்தில் மண், கட்டட இடிபாடுகளை குவித்ததால், மைதானம் மட்டுமின்றி, பள்ளி வளாகத்துக்குள் சென்று வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நேற்று பெய்த பலத்த மழையால், மைதானத்தில் தேங்கிய மழை நீர், பள்ளியை சுற்றிலும் தேங்கியுள்ளது. மாவட்ட நிர்வாகம் ஆய்வு செய்து, கொட்டப்பட்ட குப்பை, மண்ணை முழுமையாக அகற்றி, மைதானத்தை தூய்மையாக பராமரிக்க வேண்டும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X