பொது செய்தி

தமிழ்நாடு

நமக்கு நாமே திட்டத்தில் பணியாற்ற பு.புளியம்பட்டி நகராட்சி அழைப்பு

Added : அக் 02, 2021
Share
Advertisement
புன்செய்புளியம்பட்டி: நமக்கு நாமே திட்டத்தில் மக்கள் இணைந்து பணியாற்ற, புன்செய்புளியம்பட்டி நகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.புன்செய்புளியம்பட்டி நகராட்சி சார்பில், நமக்கு நாமே திட்டம் குறித்த, மக்கள் நிதி பங்களிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. நகராட்சி கமிஷனர் அமுதா (பொறுப்பு) தலைமை வகித்தார். நகராட்சி பொறியாளர் கதிர்வேல் முன்னிலை

புன்செய்புளியம்பட்டி: நமக்கு நாமே திட்டத்தில் மக்கள் இணைந்து பணியாற்ற, புன்செய்புளியம்பட்டி நகராட்சி அழைப்பு விடுத்துள்ளது.


புன்செய்புளியம்பட்டி நகராட்சி சார்பில், நமக்கு நாமே திட்டம் குறித்த, மக்கள் நிதி பங்களிப்பு தொடர்பான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. நகராட்சி கமிஷனர் அமுதா (பொறுப்பு) தலைமை வகித்தார். நகராட்சி பொறியாளர் கதிர்வேல் முன்னிலை வகித்தார். பல்வேறு கட்சி நிர்வாகிகள், சமூக அமைப்புகள், தன்னார்வலர் மற்றும் மக்கள் கலந்து கொண்டனர்.

இதில் நகராட்சி அதிகாரிகள் பேசியதாவது: நமக்கு நாமே திட்டத்தில் மக்கள், சமூக நல அமைப்புகள், நிறுவனங்கள், சமுதாய பொறுப்பு நிதி வழங்கும் நிறுவனங்கள், குடியிருப்போர் நலச்சங்கத்தினர், ஒரு பங்கு நிதி வழங்கினால், அரசு சார்பில் இரு பங்கு நிதி ஒதுக்கி, மக்கள் பரிந்துரைக்கும் சிறப்பு நலப்பணிகள் மேற்கொள்ளப்படும். பூங்கா, நீர் நிலைகள் புனரமைத்தல், அங்கன்வாடிகள் மேம்படுத்துதல், மரக்கன்று நடுதல், நவீன தெருவிளக்குகள் அமைத்தல், விளையாட்டு மைதானங்கள், நூலகங்கள், சுகாதார நிலையங்கள், மின் மயானங்கள் அமைத்தல், சாலைகள், சிறு பாலங்கள் மற்றும் மழை நீர் வடிகால் கட்டுதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம். இதில் பங்கேற்க விரும்புவோர், தாங்கள் செயல்படுத்த விரும்பும் பணியை தேர்வு செய்து, அதற்கான விண்ணப்பத்தை, நகராட்சி கமிஷனர் அல்லது பொறியாளரிடம் வழங்கலாம். மேலும் விபரங்களுக்கு நகராட்சி அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம், இவ்வாறு அதிகாரிகள் பேசினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X