பொது செய்தி

தமிழ்நாடு

பெயரளவுக்கு நடக்கும் கிராமசபை; இன்று பயனுள்ளதாக இருக்குமா?

Added : அக் 02, 2021
Share
Advertisement
பவானிசாகர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சிகளில், இன்று கிராமசபை கூட்டம் நடக்கவுள்ளது. இதில் பவானிசாகர் ஒன்றியத்தில், 15 பஞ்.,களில், சிறப்பு அதிகாரிகள் மேற்பார்வையில், கிராமசபை கூட்டம் நடக்கும் என தெரிகிறது. வழக்கமாக கிராம சபை கூட்டங்கள், பெயரளவில் மட்டுமே நடக்கின்றன. ஊராட்சி அடிப்படை வசதி, வரவு, செலவு பிரச்னை குறித்து விவாதம் நடப்பதில்லை.

பவானிசாகர்: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு, ஈரோடு மாவட்டத்தில் ஊராட்சிகளில், இன்று கிராமசபை கூட்டம் நடக்கவுள்ளது. இதில் பவானிசாகர் ஒன்றியத்தில், 15 பஞ்.,களில், சிறப்பு அதிகாரிகள் மேற்பார்வையில், கிராமசபை கூட்டம் நடக்கும் என தெரிகிறது. வழக்கமாக கிராம சபை கூட்டங்கள், பெயரளவில் மட்டுமே நடக்கின்றன. ஊராட்சி அடிப்படை வசதி, வரவு, செலவு பிரச்னை குறித்து விவாதம் நடப்பதில்லை. மக்களுக்கும் முறையான தகவல் தெரிவிப்பதில்லை. துப்புரவு தொழிலாளர், அரசியல் கட்சி நிர்வாகிகள், 100 நாள் வேலை திட்ட தொழிலாளர்களை வைத்து, காதும் காதும் வைத்த மாதிரி முடித்துக் கொள்வதே, கடந்த சில ஆண்டுகளாக நடந்தது. கொரோனாவால் அதுவும் பாதித்தது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில், இன்றைய கூட்டம், பயனுள்ளதாக நடக்குமா என, மக்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இதுகுறித்து மக்கள் கூறியதாவது: கிராமசபை கூட்டத்தை, பெயரளவுக்கு நடத்தி, புகைப்படம் எடுத்து, உயரதிகாரிகளுக்கு அனுப்பி, கடமையை முடித்து கொள்கின்றனர். புது ஆட்சியில் இன்று நடக்கும் கூட்டம், முறையாக நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இவ்வாறு கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X