1,570 கிலோ கலப்பட வெல்லம் 5,600 கிலோ சர்க்கரை பறிமுதல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

1,570 கிலோ கலப்பட வெல்லம் 5,600 கிலோ சர்க்கரை பறிமுதல்

Added : அக் 02, 2021
Share
ஓமலூர்: சப் - கலெக்டர் ஆய்வால், 1,570 கிலோ கலப்பட வெல்லம், 5,600 கிலோ சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது.சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, காமலாபுரம் விமான நிலையத்தை சுற்றி, கரும்பாலையில் டயர்களை எரிப்பதாக, மேட்டூர் சப் - கலெக்டர் வீர்பிரதாப் சிங்குக்கு புகார் சென்றது. நேற்று, அப்பகுதியில் இயங்கும் கரும்பாலைகளை ஆய்வு செய்தார். அப்போது, கலப்படம் செய்வதற்காக, விதிகளுக்கு புறம்பாக

ஓமலூர்: சப் - கலெக்டர் ஆய்வால், 1,570 கிலோ கலப்பட வெல்லம், 5,600 கிலோ சர்க்கரை பறிமுதல் செய்யப்பட்டது.


சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே, காமலாபுரம் விமான நிலையத்தை சுற்றி, கரும்பாலையில் டயர்களை எரிப்பதாக, மேட்டூர் சப் - கலெக்டர் வீர்பிரதாப் சிங்குக்கு புகார் சென்றது. நேற்று, அப்பகுதியில் இயங்கும் கரும்பாலைகளை ஆய்வு செய்தார். அப்போது, கலப்படம் செய்வதற்காக, விதிகளுக்கு புறம்பாக சர்க்கரை, சோடியம் டை சல்பேட் போன்ற வேதி பொருட்கள் மூலம், பாதுகாப்பற்ற முறையில் உற்பத்தி செய்வதை, ஆய்வில் கண்டுபிடித்தனர். இதையடுத்து, உணவு பாதுகாப்பு துறை அலுவலருக்கு தகவல் கொடுத்து, 8 ஆலைகளில் சோதனை நடந்தது. அதில், வெள்ளை சர்க்கரை, 5,600 கிலோ, வெல்லம், 1,570 கிலோ, சோடியம் ஹைட்ரோ சல்பைட், 2 கிலோ, மைதா, 75 கிலோ, செயற்கை நிறமூட்டி, 50 கிராம் ஆகியவற்றை, அதிகாரிகள் கைப்பற்றினர். மேலும், விமான நிலையத்தை சுற்றி, 1 கி.மீ., சுற்றளவில், கரும்பாலைகள் இயங்கக்கூடாது என, அதன் உரிமையாளர்களிடம், சப்-கலெக்டர் தெரிவித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X