பொது செய்தி

தமிழ்நாடு

'விவசாயிகளின் உற்ற நண்பன் பூஞ்சை'

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஓமலூர்: சர்வதேச பூஞ்சைகள் தினத்தையொட்டி, சேலம், கருப்பூர் பெரியார் பல்கலை நுண்ணுயிரியல் துறை சார்பில், பூஞ்சை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. துறைத்தலைவர் பாலகுருநாதன் தலைமை வகித்தார். துணைவேந்தர் ஜெகநாதன், கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசியதாவது: பூஞ்சைகள் விவசாயிகளின் உற்ற நண்பனாக திகழ்கின்றன. பயிர்கள் மீதான நோய் தாக்குதலை தடுக்கின்றன. பறவைகள்

ஓமலூர்: சர்வதேச பூஞ்சைகள் தினத்தையொட்டி, சேலம், கருப்பூர் பெரியார் பல்கலை நுண்ணுயிரியல் துறை சார்பில், பூஞ்சை குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது. துறைத்தலைவர் பாலகுருநாதன் தலைமை வகித்தார். துணைவேந்தர் ஜெகநாதன், கருத்தரங்கை தொடங்கிவைத்து பேசியதாவது: பூஞ்சைகள் விவசாயிகளின் உற்ற நண்பனாக திகழ்கின்றன. பயிர்கள் மீதான நோய் தாக்குதலை தடுக்கின்றன. பறவைகள் முழுமையாக நீங்கினால் கூட வனப்பகுதி பிழைத்துக்கொள்ளும். பூஞ்சைகள் இல்லாமல் வனங்கள் நீடிக்க முடியாது. காளான் வகை பூஞ்சையால், சிறந்த ஊட்டச்சத்துகளான பால்மெட்டிக் ஆசிட், தைமால், செசாமின் உள்ளிட்ட பல்வேறு பலன்கள் கிடைக்கின்றன. இதன்மூலம் தோல் சுருக்கம், உணவு செரிமானம், நோய் எதிர்ப்பு சக்தி, இதயம் தொடர்பான நோய்களில் இருந்து பாதுகாப்பு கிடைக்கிறது. இவ்வாறு அவர் பேசினார். சேலம் அரசு மருத்துவமனை கண்காணிப்பாளர் தனபால் பேசுகையில், ''கறுப்பு பூஞ்சை நோய் தொற்று பெரிய சவாலாக மாறி விட்டது. 8 மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு சேலம் அரசு மருத்துவமனையில், அந்த நோய்க்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. பூஞ்சைகள் பற்றிய விழிப்புணர்வை, மக்களுக்கு ஏற்படுத்துவதன் மூலம் இதை தவிர்க்க முடியும்,'' என்றார். மேலும், விழிப்புணர்வு போட்டி நடத்தி, மாணவ, மாணவியருக்கு பரிசு, சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X