பொது செய்தி

தமிழ்நாடு

தாசில்தாரை முற்றுகையிட்ட வியாபாரிகள்; 3 மணி நேரத்துக்கு பின் கடைகள் அகற்றம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஏற்காடு: ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முயன்றதால், தாசில்தாரை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். 3 மணி நேரத்துக்கு பின், போலீசார் சமாதானப்படுத்தி, கடைகளை அகற்றினர்.ஏற்காடு வரும் சுற்றுலா பயணியர், 3 கி.மீ., தொலைவில் உள்ள கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு விரும்பி செல்வர். அங்குள்ள கார் பார்க்கிங் அருகே, அரசு நிலத்தில் சிலர் தள்ளுவண்டி கடை, சிறுவகை பெட்டி கடைகளை வைத்து நடத்தி வந்தனர்.

ஏற்காடு: ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற முயன்றதால், தாசில்தாரை வியாபாரிகள் முற்றுகையிட்டனர். 3 மணி நேரத்துக்கு பின், போலீசார் சமாதானப்படுத்தி, கடைகளை அகற்றினர்.


ஏற்காடு வரும் சுற்றுலா பயணியர், 3 கி.மீ., தொலைவில் உள்ள கிளியூர் நீர்வீழ்ச்சிக்கு விரும்பி செல்வர். அங்குள்ள கார் பார்க்கிங் அருகே, அரசு நிலத்தில் சிலர் தள்ளுவண்டி கடை, சிறுவகை பெட்டி கடைகளை வைத்து நடத்தி வந்தனர். சில நாளுக்கு முன், வருவாய்த்துறை அதிகாரிகள், 'இந்த இடம் வருவாய்த்துறைக்கு சொந்தமானது என்பதால், காலி செய்துகொள்ளுங்கள்' என கூறியிருந்தனர். நேற்று முன்தினம், கடையை அகற்றாவிடில், அரசே அப்புறப்படுத்தும் என எச்சரித்திருந்தனர். நேற்றும் கடைக்காரர்கள் அகற்றிக்கொள்ளாததால், தாசில்தார் ரவிகுமார் தலைமையில் அதிகாரிகள், பணியாளர்கள், போலீஸ் பாதுகாப்புடன், பொக்லைன் மூலம், கடையை அகற்ற முயன்றனர். அப்போது, கடைக்காரர்கள் தாசில்தாரை முற்றுகையிட்டனர். 3 மணி நேரம் கடைகளை அகற்ற விடாமல் வாக்குவாதம் செய்து, பொக்லைன் முன் அமர்ந்து, பணியை தடுத்து நிறுத்தினர். பின், 10 நாள் அவகாசம் கேட்க, அதிகாரிகள் ஏற்கவில்லை. தொடர்ந்து, போலீசார் பேச்சு நடத்திய பின், அவர்கள் கடைகளை தாங்களாகவே அகற்றிக்கொண்டனர்.

வாழப்பாடியிலும் அகற்றம்: வாழப்பாடி பேரூராட்சியில், கடலூர் பிரதான சாலையில், பஸ் ஸ்டாண்டில் இருந்து, விநாயகர் கோவில் வரை, சாலை இருபுறமும், வியாபாரிகள் கடை வைத்திருந்தனர். கடந்த, 29ல் முதல்வர் ஸ்டாலின் வாழப்பாடி வந்தார். அதற்காக, ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றப்பட்டன. முதல்வர் வந்து சென்ற நிலையில், மீண்டும் கடைகள் வைக்க, வியாபாரிகள் முயன்ற நிலையில், போலீசார் அனுமதிக்கவில்லை.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X