சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வாணியம்பாடி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கால் உடைந்த நிலையில் கைது

Added : அக் 02, 2021
Share
Advertisement
வாணியம்பாடி: வாணியம்பாடி கொலை வழக்கில், முக்கிய குற்றவாளி கால் உடைந்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி ஜீவாநகரை சேர்ந்தவர் வசீம் அக்ரம், 40. மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளராக இருந்த அவர் கடந்த மாதம் 10ம் தேதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தனிப்படை அமைத்து கஞ்சா வியாபாரி இம்தியாஸ் உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
வாணியம்பாடி கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி கால் உடைந்த நிலையில் கைது


வாணியம்பாடி: வாணியம்பாடி கொலை வழக்கில், முக்கிய குற்றவாளி கால் உடைந்த நிலையில் போலீசார் கைது செய்தனர்.
திருப்பத்துார் மாவட்டம், வாணியம்பாடி ஜீவாநகரை சேர்ந்தவர் வசீம் அக்ரம், 40. மனித நேய ஜனநாயக கட்சி மாநில துணை செயலாளராக இருந்த அவர் கடந்த மாதம் 10ம் தேதி இரவு வெட்டிக் கொலை செய்யப்பட்டார். தனிப்படை அமைத்து கஞ்சா வியாபாரி இம்தியாஸ் உள்ளிட்ட 20 பேரை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய விசாரணையில், வசீம் அக்ரத்தை கொலை செய்ய திட்டம் போட்டுக் கொடுத்து கூலிப்படையினரை ஏற்பாடு செய்து 20 கத்திகள் வாங்கிக் கொடுத்தது வாணியம்பாடியை சேர்ந்த தாஜூதீன், 30, என்பது தெரியவந்தது.

போலீசார் அவரது மொபைல் போன் வைத்து நடமாட்டத்தை கண்காணித்து வந்தனர். வாணியம்பாடி நேதாஜி நகரில் அவர் ஒரு வீட்டில் பதுங்கி இருக்கும் தகவல் போலீசாருக்கு தெரியவந்தது. வாணியம்பாடி போலீசார் நேற்று இரவு அந்த வீட்டை துப்பாக்கி முனையில் போலீசார் சுற்றி வளைத்தனர். அப்போது சரணடைவதாக கூறியபடி வெளியே வந்த தாஜூதீன் தப்பியோடினார். போலீசார் விரட்டிச் சென்றதில், கீழே விழுந்த அவருக்கு வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அவரை கைது செய்த போலீசார் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து வாணியம்பாடி குற்றவியல் மாஜிஸ்திரேட்டிடம் நள்ளரவு ஆஜர்படுத்திய பின் வேலுார் மத்திய ஆண்கள் சிறையில் அடைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X