பொது செய்தி

இந்தியா

தீவிர புயலாக மாறும் 'ஷாகீன்:' தமிழகத்தில் அதிகன மழைக்கு வாய்ப்பு

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: 'அரபிக் கடலில் உருவாகியுள்ள ஷாகீன் புயல் இன்று (அக்., 2) தீவிர புயலாக மாறும். இதனால் தமிழகத்தில் அக்., 4 வரை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: அரபிக் கடலில் உருவான 'ஷாகீன்' புயல், நேற்று (அக்., 1) காலை 5:30 மணி நிலவரப்படி, குஜராத்தின் தேவபூமி

புதுடில்லி: 'அரபிக் கடலில் உருவாகியுள்ள ஷாகீன் புயல் இன்று (அக்., 2) தீவிர புயலாக மாறும். இதனால் தமிழகத்தில் அக்., 4 வரை அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது' என, இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



latest tamil news


இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்து உள்ளதாவது: அரபிக் கடலில் உருவான 'ஷாகீன்' புயல், நேற்று (அக்., 1) காலை 5:30 மணி நிலவரப்படி, குஜராத்தின் தேவபூமி துவாரகாவில் இருந்து மேற்கு, வடமேற்கில் சுமார் 400 கி.மீ., தொலைவிலும், பாகிஸ்தானின் கராச்சியில் இருந்து தெற்கு, தென்மேற்கே 260 கி.மீ., தொலைவிலும் மையம் கொண்டிருந்தது.

இது, அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும். இதனால், மீனவர்கள் அக்., 4ம் தேதி வரை வட அரபிக் கடல் பகுதியில் மீன் பிடிக்க செல்லக் கூடாது.


latest tamil news



புயல் காரணமாக மேற்கு வங்கம், சிக்கிம், தமிழகம், கேரளா, கர்நாடகா, குஜராத் உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் அக்., 2 முதல் 4ம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் அதிகனமழை பெய்யவும் வாய்ப்புள்ளது.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R S BALA - CHENNAI,இந்தியா
02-அக்-202121:54:10 IST Report Abuse
R S BALA தமிழகம்ன்னா எந்த மாவட்டம்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X