பொது செய்தி

தமிழ்நாடு

' ஒளிமயமான தமிழகம் '- மதுரை கிராம சபை கூட்டத்தில் ஸ்டாலின் பேச்சு

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (33)
Share
Advertisement
மதுரை: மதுரை, பாப்பாப்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.கோவிட் பரவல் காரணமாக கடந்த 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கிராம சபை கூட்டம் இன்று நடந்த து. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, மக்களின் குறைகளை கேட்டறிந்தார். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு கலந்து கொள்ளும் முதல் கிராம சபை கூட்டம் இது ஆகும். 750 பேர் கலந்து கொண்ட இந்த
D.M.K,M.K.Stalin,Madurai,Stalin,தி.மு.க,மதுரை,ஸ்டாலின்

மதுரை: மதுரை, பாப்பாப்பட்டியில் நடந்த கிராம சபை கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டார்.

கோவிட் பரவல் காரணமாக கடந்த 1.5 ஆண்டுகளுக்கு பிறகு கிராம சபை கூட்டம் இன்று நடந்த து. கூட்டத்தில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்று, மக்களின் குறைகளை கேட்டறிந்தார். ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற பிறகு கலந்து கொள்ளும் முதல் கிராம சபை கூட்டம் இது ஆகும். 750 பேர் கலந்து கொண்ட இந்த கூட்டத்தில் ஸ்டாலின் முன்னிலையில், கிராம மக்கள் உறுதிமொழி ஏற்று கொண்டனர்.பாப்பாப்பட்டியில் உள்ளாட்சி தேர்தல் நடந்த போது, மதுரை கலெக்டராக இருந்த உதயசந்திரனும் பங்கேற்றார்.

இந்த கூட்டத்தில் ஸ்டாலின் பேசியதாவது: கொரோனா காரணமாக 2 ஆண்டுகளாக கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை. மரபின்படி நடக்கும் பாப்பாப்பட்டி கிராம சபை கூட்டம் நடக்கிறது. கிராமங்கள் வளர்ந்தால் தான் நாடு வளர்ச்சியடையும் என காந்தியடிகள் தெரிவித்தார். எத்தனை நிகழ்ச்சிகளில் பங்கேற்றாலும் அதில் கிடைக்கும் மகிழ்ச்சியை விட, கிராம சபை கூட்டத்தில் அதிக மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கடைகோடி கிராம மக்களின் குரலை கேட்கவே இந்த கூட்டத்தில் பங்கேற்றேன். வட மாவட்டங்கள், தென் மாவட்டங்கள் என பாகுபாடு பார்க்காமல் தமிழகத்தின் மொத்த வளர்ச்சியே அரசின் இலக்கு. ஒளிமயமான தமிழகம் அமைக்க பாடுபடுவோம். கிராம சபை கூட்டத்தில் எழுப்பிய கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்.
பாப்பாப்பட்டி கிராமத்தில் ஊராட்சி மன்ற அலுவலகம், நியாய விலை கடை, மேல்நிலை குடிநீர் தொட்டி, மயானங்கள் சீர்படுத்துதல், மகாதேவன்பட்டி கிராமத்தில் அங்கன்வாடி மையம் கட்டடம் அமைக்கப்படும். கரையாம்பட்டியில், கதிரடிக்கும் களம் அமைக்கப்படும். வளர்ச்சி பணிகள் குறித்து வாரந்தோறும் மாவட்ட கலெக்டர்களுடன் ஆலோசனை நடத்துவேன். இவ்வாறு அவர் பேசினார்.


மதுரை விமான நிலையத்தில் இருந்து கிராம சபை கூட்டத்திற்கு செல்லும் வழியில், மக்களிடம் ஸ்டாலின் கோரிக்கை மனுக்களை பெற்று கொண்டார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (33)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi.v - doha,கத்தார்
03-அக்-202117:43:35 IST Report Abuse
ravi.v விடியல் அரசு வந்ததும் எங்கள் ஊரில் தெரு விளக்குகள் எரிவதே இல்லை. விடியா அரசே இதற்கு பதிள் சொல்.
Rate this:
Cancel
தமிழ் மைந்தன் - coiambatore,இந்தியா
02-அக்-202122:56:14 IST Report Abuse
தமிழ் மைந்தன் இருண்ட தமிழக இனி விடிய ஐந்து ஆண்டுகள் போக வேண்டும்
Rate this:
Cancel
Davamani Arumuga Gounder - Namakkal,இந்தியா
02-அக்-202120:54:18 IST Report Abuse
Davamani Arumuga Gounder .. '' ஒளிமயமான தமிழகம் என் உள்ளத்தில் தெரிகிறது .. அப்டீனா ... அணில்களே நீங்கள் எல்லாம் வேறு மாநிலங்களுக்கு ஓடிவிடுங்கள்.. ஆமாம்.. இனிமேலும் தமிழகத்தில் இருந்து உங்கள் சேட்டைகளை காண்பித்தால் என்கவுன்டர் செய்யப்படுவீர்கள்.. சொல்லிப்புட்டேன், அம்புடுதேன்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X