பொது செய்தி

தமிழ்நாடு

நவம்பர் 1 ல் பள்ளிகள் திறப்பு உறுதி

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருச்சி: தமிழகத்தில், நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை, என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு,உப்புச் சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் திருச்சியில் நடந்த மாரத்தான் போட்டியை, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார்.அதன்பின், அவர் கூறியதாவது:தமிழகத்தில், 1 முதல்
நவம்பர் 1 ல் பள்ளிகள் திறப்பு உறுதி


திருச்சி: தமிழகத்தில், நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறப்பதில் எவ்வித மாற்றமும் இல்லை, என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் தெரிவித்தார்.

மகாத்மா காந்தி ஜெயந்தியை முன்னிட்டு,உப்புச் சத்தியாக்கிரக விழிப்புணர்வு இயக்கம் சார்பில் திருச்சியில் நடந்த மாரத்தான் போட்டியை, பள்ளிக்கல்வி அமைச்சர் மகேஷ் துவக்கி வைத்தார்.

அதன்பின், அவர் கூறியதாவது:தமிழகத்தில், 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பது குறித்து, அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்ட கல்வி அலுவலர்களிடம் அறிக்கை பெறப்பட்டது. அவர்கள் ஒவ்வொருவரும், ஒவ்வொரு விதமான கருத்துக்களை தெரிவித்து இருந்த போதிலும்,பொது சுகாதார துறையிடம் ஆலோசனை நடத்திய தமிழக முதல்வர், நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகளை திறக்கலாம், என்று தெரிவித்துள்ளார். குழந்தைகள் நலனில் அக்கறை கொண்ட தமிழக முதல்வர், அனைத்து தரப்பினரிடமும் நன்கு ஆலோசித்து, நவம்பர் 1ம் தேதி முதல் பள்ளிகள் திறக்க முடிவு செய்துள்ளார. அதில் எவ்வித மாற்றமும் இல்லை. இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X