கோழி வளர்ப்பில் மோசடி குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

கோழி வளர்ப்பில் மோசடி குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

Added : அக் 02, 2021
Share
கோவை: நாட்டு கோழி வளர்ப்பு நிதி நிறுவனம் நடத்தி, 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கருமாண்டி செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 39; சகோதரர் மகேஷ், 36. இவர்கள், கோவை மாவட்டம், சோமனுாரில் சாருபாலா எனும் பெயரில் நாட்டுக்கோழி வளர்ப்பு நிதி நிறுவனம்நடத்தினர்.பல்வேறு கவர்ச்சி திட்டங்களை
கோழி வளர்ப்பில் மோசடி குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை

கோவை: நாட்டு கோழி வளர்ப்பு நிதி நிறுவனம் நடத்தி, 40 லட்சம் ரூபாய் மோசடி செய்த வழக்கில், குற்றவாளிக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறை, கருமாண்டி செட்டிபாளையத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ், 39; சகோதரர் மகேஷ், 36. இவர்கள், கோவை மாவட்டம், சோமனுாரில் சாருபாலா எனும் பெயரில் நாட்டுக்கோழி வளர்ப்பு நிதி நிறுவனம்நடத்தினர்.பல்வேறு கவர்ச்சி திட்டங்களை அறிவித்து, 16 பேரிடம் 40 லட்சம் ரூபாய் பெற்று மோசடி செய்தனர்.

கோவை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார், இருவரையும் 2012 டிச., 30ல் கைது செய்து, கோவை 'டான்பிட்' நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.இருவரும் ஜாமினில் சென்ற பின், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானதால், வழக்கு பிரிக்கப்பட்டு தனித் தனியாக விசாரணை நடந்து வந்தது. பிரகாஷ் மீதான வழக்கில், கடந்த ஏப்ரலில் 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

பிரகாஷ் தொடர்ந்து தலைமறைவாகவே உள்ளார். இந்நிலையில், தலைமறைவாக இருந்த மகேஷ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு 10ஆண்டுகள் சிறை, 12 லட்சம் ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி ரவி நேற்று தீர்ப்பளித்தார்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X