சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நகை, பணத்துடன் திருட்டு காரில் பயணித்த வாலிபர் பிடிப்பட்டார்!

Added : அக் 02, 2021
Share
Advertisement
திருச்சி: சென்னை அருகே நகை, பணத்தை திருடிவிட்டு, திருட்டு காரில் தப்பி வந்த வாலிபரை, திருச்சி போலீசார் மடக்கிப் பிடித்தனர்.சென்னை முடிச்சூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 50 ஆயிரம் ரூபாய், 50 கிராம் தங்கம், வெள்ளிப்பொருட்களை திருடிய வாலிபர், அந்த வீட்டின் முன் நின்றிருந்த காரையும் திருடிக் கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து சென்னை போலீசார் விசாரித்தபோது, அந்த

திருச்சி: சென்னை அருகே நகை, பணத்தை திருடிவிட்டு, திருட்டு காரில் தப்பி வந்த வாலிபரை, திருச்சி போலீசார் மடக்கிப் பிடித்தனர்.

சென்னை முடிச்சூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில், 50 ஆயிரம் ரூபாய், 50 கிராம் தங்கம், வெள்ளிப்பொருட்களை திருடிய வாலிபர், அந்த வீட்டின் முன் நின்றிருந்த காரையும் திருடிக் கொண்டு தப்பியோடி விட்டார். இதுகுறித்து சென்னை போலீசார் விசாரித்தபோது, அந்த வாலிபர் காருடன் திருச்சி நோக்கி செல்வது தெரிய வந்தது. இதையடுத்து காரை மடக்கி பிடிக்க, விழுப்புரம், உளுந்துார்பேட்டை, பெரம்பலுார் போலீசாரை அணுகி உள்ளனர்.

ஆனால் மின்னல் வேகத்தில் வந்த காரை அவர்களால் பிடிக்க முடியவில்லை. இதையடுத்து திருச்சி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சமயபுரம் டோல் அருகே காரை மடக்க, ரோட்டை மறித்து பேரிகார்டுகள் போடப்பட்டன. ஆனால் அவற்றையும் மோதித்தள்ளி விட்டு, வாலிபர் காரை ஓட்டிச் சென்றார். அவர் மதுரை ரோட்டில் சென்றதால், திருச்சி மாநகர போலீசார், சாரநாதன் கல்லுாரி அருகே பைபாஸ் ரோட்டை மறித்து, கார், வேன்களை நிறுத்தி வைத்திருந்தனர்.

இதனால் தப்பிக்க முடியாது என்று நினைத்த வாலிபர், காரை திருப்பிச் செல்ல முயன்றார். பின்னால் ஹைவே பேட்ரோல் வாகனங்கள் வந்ததால், காரை நிறுத்தி விட்டு, அங்கிருந்த வயல்வெளியில் தப்பியோட முயன்றார். அங்கிருந்த போலீசாரும், மாடு மேய்த்தவர்களும் விரட்டிச் சென்று வாலிபரை மடக்கிப் பிடித்து, எடமலைப்பட்டிபுதுார் போலீஸ் ஸ்டேஷன் கொண்டு வந்து விசாரித்தனர்.

விசாரணையில் வாலிபர், சென்னை தாம்பரம் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார், 19, என்று தெரியவந்தது. சென்னை போலீசாருக்கு தகவல் தெரிவித்து, போலீசார் தொடர்ந்து வாலிபரிடம் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X