கோர்ட் செய்தி

தமிழ்நாடு

விடுதலை செய்யக் கோரி நளினி வழக்கு: அரசுக்கு உத்தரவு

Added : அக் 02, 2021
Share
Advertisement
சென்னை: கவர்னரின் ஒப்புதல் இன்றி விடுதலை செய்யக் கோரிய நளினியின் மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்த மனு: என்னை விடுதலை செய்ய, தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து, 2018 செப்டம்பரில் கவர்னருக்கு அனுப்பியது. அமைச்சரவையின் ஆலோசனை கவர்னரை

சென்னை: கவர்னரின் ஒப்புதல் இன்றி விடுதலை செய்யக் கோரிய நளினியின் மனுவுக்கு, தமிழக அரசு பதில் அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை வழக்கில், ஆயுள் தண்டனை கைதியாக உள்ள நளினி தாக்கல் செய்த மனு: என்னை விடுதலை செய்ய, தமிழக அமைச்சரவை பரிந்துரைத்து, 2018 செப்டம்பரில் கவர்னருக்கு அனுப்பியது. அமைச்சரவையின் ஆலோசனை கவர்னரை கட்டுப்படுத்தும். அதன்படி, நான் விடுதலை செய்யப்பட்டிருக்க வேண்டும். அமைச்சரவையின் முடிவை செயல்படுத்தக் கோரிய மனுவை, உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அமைச்சரவையின் பரிந்துரைப்படி, கவர்னர் செயல்பட தவறியுள்ளார். எனவே, கவர்னரின் ஒப்புதல் இன்றி என்னை விடுதலை செய்ய, தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

மனு, தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ராதாகிருஷ்ணன் ஆஜரானார். மனுவுக்கு பதில் அளிக்க, தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, விசாரணையை தசரா விடுமுறைக்கு பின் தள்ளி வைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X