பொது செய்தி

இந்தியா

லடாக் எல்லையில் படைகளின் தயார்நிலை குறித்து ராணுவ தளபதி ஆய்வு

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி: சீனாவுடனான எல்லைப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், கிழக்கு லடாக்கின் பல்வேறு எல்லைப் பகுதிகளை ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே பார்வையிட்டார்.கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி அருகே கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டது. அப்போது இரு நாடுகளிடையே மோதல் தொடங்கியது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளும் தூதரக

புதுடில்லி: சீனாவுடனான எல்லைப் பிரச்சனை நீடித்து வரும் நிலையில், கிழக்கு லடாக்கின் பல்வேறு எல்லைப் பகுதிகளை ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம். நரவணே பார்வையிட்டார்.



latest tamil news




கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் ஏரி அருகே கடந்த ஆண்டு மே மாதம் சீன ராணுவம் அத்துமீறலில் ஈடுபட்டது. அப்போது இரு நாடுகளிடையே மோதல் தொடங்கியது. இந்த மோதலை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளும் தூதரக அளவிலும், ராணுவ அதிகாரிகள் இடையேயும் பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டன. தற்போது கிழக்கு லடாக் எல்லை கட்டுப்பாட்டுப் பகுதியில் இந்தியாவும் சீனாவும் தலா 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்களை நிறுத்திவைத்து உள்ளன.


latest tamil news




இந்நிலையில், இன்று (அக்., 2) இந்திய ராணுவம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'ராணுவத் தலைமைத் தளபதி எம்.எம்.நரவணே, இரண்டு நாள் பயணமாக கிழக்கு லடாக் சென்றுள்ளார். முதல் நாளில் மிகுந்த பதற்றத்துக்குரிய ரெசாங்-லா உள்ளிட்ட பல்வேறு எல்லைப் பகுதிகளுக்குச் சென்று இந்திய படைகளின் தயார் நிலையை ஆய்வு செய்தார். அங்குள்ள நம் வீரர்களுடனும் கலந்துரையாடினார். பின், லடாக் துணைநிலை ஆளுநர் ராதா கிருஷ்ண மாத்துரைச் சந்தித்து யூனியன் பிரதேச பாதுகாப்பு சூழல் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்' எனத் தெரிவித்துள்ளது.




விரைவில் 13வது சுற்று பேச்சுவார்த்தை



லடாக் எல்லையில் நரவானே அளித்த பேட்டி:இந்தியா- சீனா இடையிலான கருத்து வேறுபாடுகளை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என உறுதியாக நம்புகிறேன். அக்.,2வது வாரத்தில் 13வது சுற்று பேச்சுவார்த்தை நடக்கும் என எதிர்பார்க்கிறோம். கடந்த 6 மாதங்களாக நிலைமை மிகவும் சாதாரணமாக உள்ளது. சீனாவின் நடவடிக்கைகளை நாங்கள் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். எந்த சவாலையும் சந்திக்க தயாராக உள்ளோம்.
பிப்., முதல் ஜூன் இறுதிவரை பாக்., ராணுவம், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறவில்லை. ஆனால், கடந்த 10 நாட்களில் 2 முறை இந்த ஒப்பந்தம் மீறப்பட்டு உள்ளது.
ஆப்கன் நிலைமை குறித்து இந்திய ராணுவம் உன்னிப்பாக கவனித்து வருகிறது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
02-அக்-202115:50:28 IST Report Abuse
அப்புசாமி சீனா போக விசா தரமாட்டேங்குறாங்க. ஏதாவது பதிலடி தர முடியுமான்னு பாருங்க...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X