சென்னை: 'போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை அழைத்து பேசி பணிப் பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்' என அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் மாவட்ட கலெக்டரால் பணியமர்த்தப்படுவதால் எப்போது வேண்டுமானாலும் விடுவிக்கப்படலாம் என்ற அச்சம் அவர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ளது. எனவே பணிப் பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தனியார் மருத்துவமனைகளில் வேலையை விட்டுவிட்டு அரசு மருத்துவமனைகளில் பணிபுரிய வந்துள்ளவர்களை பணியில் இருந்து விடுவிப்பது ஏற்கக் கூடியதல்ல.கொரோனா காலத்தில் பணியாற்றிய அனைத்து செவிலியர்களுக்கும் பணிப் பாதுகாப்பு மற்றும் பணி நிரந்தரம் வழங்குவது மக்கள் நலன்பயக்கும் செயல்.எனவே முதல்வர் உடனடியாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களை அழைத்து பேசி பணிப் பாதுகாப்பு பணி நிரந்தரம் உள்ளிட்ட அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE