இந்த வரிசைமுறையில் தான் புதிய வீடு உருவாகும்!

Added : அக் 02, 2021
Share
Advertisement
வீடு கட்டுவது சாதாரண விஷயமல்ல. பொறியாளர் உரிமையாளர் பணியாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்படி வீடு கட்டுவோர் திட்டமிட சிவில் பொறியாளர்கள் கட்டுமான பணிகளில் உள்ள வரிசை முறை குறிப்பிடுவர்.கட்டுமான அஸ்திவாரம்கட்டுமான பணிகளின் ஆரம்பத்தில் பூமி பூஜை என்ற வாஸ்து பூஜை செய்யப்படும். குறிப்பிட்ட ஒரு நாளில் அந்த பூஜை சம்பந்தப்பட்ட கட்டுனர் அல்லது

வீடு கட்டுவது சாதாரண விஷயமல்ல. பொறியாளர் உரிமையாளர் பணியாளர்கள் ஆகியோர் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அப்படி வீடு கட்டுவோர் திட்டமிட சிவில் பொறியாளர்கள் கட்டுமான பணிகளில் உள்ள வரிசை முறை குறிப்பிடுவர்.

கட்டுமான அஸ்திவாரம்

கட்டுமான பணிகளின் ஆரம்பத்தில் பூமி பூஜை என்ற வாஸ்து பூஜை செய்யப்படும். குறிப்பிட்ட ஒரு நாளில் அந்த பூஜை சம்பந்தப்பட்ட கட்டுனர் அல்லது பொறியாளர் உட்பட அனைத்து பணியாளர்கள் முன்னிலையில் நடக்கும். அஸ்திவார பணியில் கட்டடத்தை பொறுத்து கருங்கல் அல்லது பில்லர் அஸ்திவாரம் மனை அமைப்பிற்கு ஏற்ப அமைப்பர். பின் அஸ்திவார குழியில் ஆற்று மணல் நிரப்பி ஜல்லி கான்கிரீட் இடப்படும். தளப்பரப்பில் ஒன்றரை ஜல்லி கான்கிரீட் இட்டு. வெளி செங்கல் சுவரில் முக்கால் அடி கன கலவை பூசப்படும்.

இடைவெளி

தடுப்பு சுவருக்கு ஏற்ப பூச்சு வேலைகள் செய்வர் பேஸ்மட்டத்தில் இருந்து 3 அடி உயரமுள்ள செங்கல் சுவர் அமைக்கப்படும். அந்த மட்டத்திலிருந்து மேற்கூரை 10 அடி உயரம் அமைப்பர். ரெடிமேட் கதவுகள்மேற்கூரைக்கு மெயின் கம்பிகள் எக்ஸ்டென்ஷன் கம்பிகள் போதிய கனத்தில் அமைக்கப்படும். ஆர்.சி.சி லிண்டல் பீம் கான்கிரீட் முக்கால் அடி இடைவெளியில் கட்டப்படும். லாப்ட் சன்ஷேடு சிலாப் 8 மி.மி கம்பி அரையடி இடைவெளியில் அமைத்து பூசப்படும்.

வீடுகளின் உள்புற கதவுகளை பட்ஜெட்டுக்கு ஏற்ப ரெடிமேடாக வாங்கலாம். கழிவறை குளியலறைக்கு யு.பி.வி.சி. கதவுகள் ஏற்றது. ஜன்னல்களில் பொதுவாக 5 மி.மி கண்ணாடிகள் பொருத்துவர் ஜன்னல் கிரில் கம்பிகள் 12 மி.மி ஸ்கொயர் ராடுகளாக இருக்கும். தரை டைல்ஸ் வகைகளில் 2 அடிக்கு 2 அடி வெட்ரிபைடு டைல்ஸ் பதிப்பது வழக்கம். தேவைக்கு ஏற்ப பிற வகைகளும் தேர்வு செய்யலாம். குளியலறை உள்புற சுவர்களில் 7 அடி உயரம் வரை 'வால் டைல்ஸ்' பதிப்பர்.

35 எலக்ட்ரிக் பாய்ன்ட்

ஒரு வீட்டுக்கு 33 - 35 எலக்ட்ரிகல் பாயின்டுகள் இருக்கலாம். உள் அறை கப்போர்டுகளில் கடப்பா கல் பயன்படுத்தலாம். உள் வெளிப்புற சுவர்களுக்கு ஒயிட் சிமென்ட் பூசுவர். கிரில் மரப்பொருட்களுக்கு மட்டி எனாமல் பூச வேண்டும். சமையலறை மேடையை கிரானைட்டில் அமைப்பர். சமையல் குளியல் கழிவறை சுவர்களில் கன்சீல்டு குழாய் அமைக்க வேண்டும். மாடி கைப்பிடி சுவர் 3 அடி உயர செங்கல் சுவராகவும் நான்கரை அங்குல மேற்பூச்சு கொண்டதாக இருக்க வேண்டும். மாடி தளப்பரப்பில் வெப்ப தடுப்பாக சுண்ணாம்பு செங்கல் ஜல்லி சுருக்கி நிரப்பி தட்டு ஓடு பதிக்கலாம்.

இந்த வரிசை முறை கட்டுமான பணிகளில் பொதுவானது. கட்டுமான அளவு உயரம் பட்ஜெட் பணிச் சூழல் பொறியாளர் வழிகாட்டுதல்படிஇம்முறையில் மாற்றம் செய்யலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X