சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆவின் பொது மேலாளர் உள்ளிட்ட 6 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு

Added : அக் 02, 2021
Share
Advertisement
வேலுார் : தரமற்ற கருவிகள் வாங்கியதால் வேலுார் ஆவின் முன்னாள் பொது மேலாளர் உள்ளிட்ட ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரியில் ஆவின் தலைமை அலுவலகம் உள்ளது. 2017- 18 ம் ஆண்டு இங்கு பொது மேலாளராக பிரபாகரன், உதவி பொது மேலாளராக முரளிபிரசாத் பணியாற்றினர்.அப்போது இங்குள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் பயன்படுத்த ஒரு கோடியே 69

வேலுார் : தரமற்ற கருவிகள் வாங்கியதால் வேலுார் ஆவின் முன்னாள் பொது மேலாளர் உள்ளிட்ட ஆறு பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

வேலுார் மாவட்டம், சத்துவாச்சாரியில் ஆவின் தலைமை அலுவலகம் உள்ளது. 2017- 18 ம் ஆண்டு இங்கு பொது மேலாளராக பிரபாகரன், உதவி பொது மேலாளராக முரளிபிரசாத் பணியாற்றினர்.
அப்போது இங்குள்ள பால் குளிரூட்டும் நிலையத்தில் பயன்படுத்த ஒரு கோடியே 69 லட்சம் ரூபாய்க்கு 40 சுத்திகரிப்பு கருவிகள் வாங்கப்பட்டது. 2019 ஆண்டு ஆவின் செலவு கணக்கு தணிக்கை நடந்தது.

அதில் அரசின் வழிகாட்டுதல் விதிமுறைகள் மீறி ஒப்பந்தம் செய்யாமல் மார்க்கெட் விலையை விட அதிக விலைக்கு தரமற்ற சுத்திகரிப்பு கருவிகள் வாங்கியதும், இந்த கருவிகள் வாங்கிய மூன்று நிறுவனங்களும் போலியானது, அதை அதிகாரிகள் சிலரே போலி பெயர்களில் நடத்தி வருவதும் தெரியவந்தது.

இது குறித்து கணக்கு தணிக்கை துறையினர் கொடுத்த அறிக்கைபடி விசாரணை நடத்தும்படி லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ஆவின் நிர்வாகம் பரிந்துரை செய்தது. வேலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய விசாரணையில் பிரபாகரன், முரளிபிரசாத் கூட்டு சேர்ந்து மூன்று போலி நிறுவனங்களிடமிருந்து தரமற்ற சுத்திகரிப்பு கருவிகள் வாங்கியது உறுதியானது.
இதையடுத்து பொது மேலாளர் பிரபாகர், உதவி பொது மேலாளர் முரளி பிரசாத், போலி நிறுவன உரிமையாளர்கள் சிவகங்கை தென்றல் நகரை சேர்ந்த உதயகுமார், ரமேஷ், காட்பாடி தாராபடவேடு சரவணன், ஸ்ரீதர் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று வழக்கு பதிவு செய்தனர்.

தற்போது பிரபாகரன் மதுரை மாவட்ட கிராமப்புற வாழ்வாதார பணிகள் கூடுதல் இயக்குனராகவும், முரளிபிரசாத் சென்னை சோழிங்கநல்லுாரில் உள்ள தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் அலுவலக உதவி பொது மேலாளராக பணியாற்றி வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X