இயற்கை சீற்றம் தாங்கும் கல்ப் கான்கிரீட் தொழில்நுட்பம்| Dinamalar

இயற்கை சீற்றம் தாங்கும் 'கல்ப் கான்கிரீட்' தொழில்நுட்பம்

Added : அக் 02, 2021
Share
கட்டுமான துறையில் அறிமுகமான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஜி.சி.டி அதாவது 'கல்ப் கான்கிரீட் டெக்னாலஜி' என்ற முறையில் கட்டுமானங்களை விரைவில் கட்டி முடிக்கிறார்கள். இது இயற்கை சீற்றங்களை தாங்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது. 'டெட் லோடு' இருக்காது இதை அமெரிக்க நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது. விரைவில் கட்டுமானம் கட்ட இந்த தொழில்நுட்பம் உதவும்.

கட்டுமான துறையில் அறிமுகமான தொழில்நுட்ப வளர்ச்சியில் ஜி.சி.டி அதாவது 'கல்ப் கான்கிரீட் டெக்னாலஜி' என்ற முறையில் கட்டுமானங்களை விரைவில் கட்டி முடிக்கிறார்கள். இது இயற்கை சீற்றங்களை தாங்கும் தன்மை கொண்டதாகவும் இருக்கிறது.

'டெட் லோடு' இருக்காது இதை அமெரிக்க நிறுவனம் சில ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தியது. விரைவில் கட்டுமானம் கட்ட இந்த தொழில்நுட்பம் உதவும். இதை பயன்படுத்தும் போது அதிக வேலைப்பளு இருக்காது. இம்முறையில் 'பிரி பேப்ரிகேட்டடு மெத்தட்'டில் முன்பே கட்டடம் தனியாக தயாரிக்கப்படும். அவை பணி நடக்கும் இடத்திற்கு எடுத்து கட்டமைப்பாக உருவாக்கப்படும். இதில் 'டெட் லோடு' என்ற அதிக எடை பாதிப்பு குறைகிறது.

பாலிஸ்டைரின் ஷீட் சி.ஐ என்ற 'கால்வனைஸ்டு அயர்ன்' வலையை அடுக்கி இடைப்பட்ட பகுதியில் 'பாலிஸ்டைரின் ஷீட்' வைக்கப்படும். கூடுதல் உறுதிக்கு வெளியே வலுவான இரும்பு கம்பிகள் 'பாலிஸ்டைரின்' அமைப்புக்குள் செலுத்தப்படும். இரும்பு கம்பிகளோடு வெளி கம்பி வலைகளோடு 'வெல்டிங்'கில் இணைக்கப்படும். இரு வலுவான பலகை போன்ற கம்பி வலை நடுவில் 'பாலிஸ்டைரின்' வைக்கப்பட்டு தேவையான அளவில் சுவராக வடிவமைக்கப்படும்.

இயற்கை சீற்றம் தாங்கும் இந்த வேலை முடிந்ததும் கட்டுமான பணியிடத்தில் அதை சரியான அளவுகளில் பொருத்தி கட்டமைப்பு வடிவமைக்கலாம். வலுவான கான்கிரீட் கலவை அதன் இரண்டு பக்கங்களிலும் 'கான்கிரீட் ஸ்பிரேயர்' மூலம் 'ஸ்பிரே' செய்து சுவராக மாற்றப்படும். இந்த கட்டடங்கள் அதிக வெப்பம் காற்று ஆகிய இயற்கை சீற்றங்களை தாங்கும். 8 என்ற 'ரிக்டர்' அளவு கொண்ட நில நடுக்கத்திலும் பாதிப்பு குறைவு தான். வெளி சத்தம் கட்டடத்திற்குள் வராது என்கிறார்கள் கட்டுமான வல்லுனர்கள்

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X