லே பகுதியில் கதரால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி ஏற்றம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

லே பகுதியில் கதரால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி ஏற்றம்

Updated : அக் 03, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (1)
Share
லே: மஹாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, லடாக்கின் லே பகுதியில், கதரால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.இந்த தேசியக்கொடியானது 225 அடி நீளம், 150 அடி அகலம் கொண்டது. 1400 கிலோ எடை கொண்டது. தயாரிப்பதற்கு மட்டும் 49 நாட்கள் ஆனது.இன்று காலை லடாக் துணை நிலை கவர்னர் ராதாகிருஷ்ண மாத்தூர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ராணுவ தளபதி
லடாக்,  தேசியக்கொடி, லே, லடாக்

லே: மஹாத்மா காந்தி பிறந்த நாளை முன்னிட்டு, லடாக்கின் லே பகுதியில், கதரால் தயாரிக்கப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.இந்த தேசியக்கொடியானது 225 அடி நீளம், 150 அடி அகலம் கொண்டது. 1400 கிலோ எடை கொண்டது. தயாரிப்பதற்கு மட்டும் 49 நாட்கள் ஆனது.

இன்று காலை லடாக் துணை நிலை கவர்னர் ராதாகிருஷ்ண மாத்தூர் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் ராணுவ தளபதி நரவானே, மற்றும் ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தேசியக்கொடி ஏற்றப்பட்ட இடம், தரைமட்டத்தில் இருந்து 2 ஆயிரம் அடி உயரத்தில் உள்ளது. இந்த தேசிய கொடியை, இந்திய ராணுவத்தின் 57 வது பொறியாளர் படைப்பிரிவை சேர்ந்த வீரர்கள் 150 பேர் கொண்டு வந்தனர். தேசியக்கொடியை உச்சிக்கு கொண்டு வருவதற்கு சுமார் 2 மணி நேரம் ஆனது.


latest tamil news




தேசிய கொடி ஏற்றி வைத்த பின்னர் கவர்னர் மாத்தூர் கூறியதாவது: நமது தேசியக்கொடியானது ஒற்றுமை, மனிதநேயத்தின் சின்னமாகவும், அனைவராலும் ஏற்று கொண்டதற்கான சின்னமாகவும் திகழ்கிறது என மஹாத்மா காந்தி தெரிவித்து உள்ளார். நமது நாட்டின் பெருமையாகவும் தேசியக்கொடி திகழ்கிறது. இங்கு ஏற்றப்பட்ட உலகின் மிகப்பெரிய தேசியக்கொடியானது, நமது வீரர்களின் உற்சாகத்திற்கு அடையாளமாக இனி வரும் காலங்களில் திகழும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X