கட்டுமான முறைகளை அறிந்து பணிகளை துவக்க வேண்டும்

Added : அக் 02, 2021
Share
Advertisement
கட்டுமானங்களை கட்டும் முன் அதில் பயன்படுத்தும் பொருட்கள் கட்டுமான முறைகளை அறிந்து துவங்க வேண்டும். அப்போது தான் தரமாக பட்ஜெட்டில் கட்டமைக்க முடியும். கட்டுமான கம்பி கட்டுமான கம்பிகளை பொதுவாக வாங்க முடியாது. அடித்தளம் பில்லர்களுக்கு டி.எம்.டி. அடித்தள மேட் வேலைகளுக்கு 7 எம்.எம். சாதா கம்பிகள் பயன்படுத்தலாம். கட்டுமான முறைக்கு ஏற்ப எம்.எம். மாற்றி கொள்ளலாம். 1000 சதுர

கட்டுமானங்களை கட்டும் முன் அதில் பயன்படுத்தும் பொருட்கள் கட்டுமான முறைகளை அறிந்து துவங்க வேண்டும். அப்போது தான் தரமாக பட்ஜெட்டில் கட்டமைக்க முடியும்.

கட்டுமான கம்பி

கட்டுமான கம்பிகளை பொதுவாக வாங்க முடியாது. அடித்தளம் பில்லர்களுக்கு டி.எம்.டி. அடித்தள மேட் வேலைகளுக்கு 7 எம்.எம். சாதா கம்பிகள் பயன்படுத்தலாம். கட்டுமான முறைக்கு ஏற்ப எம்.எம். மாற்றி கொள்ளலாம். 1000 சதுர அடி வீடு அல்லது தரைத் தளத்துடன் கூடுதலாக ஒரு தளம் கொண்ட வீடாக இருந்தால் மேட் அமைக்க 7 எம்.எம். சாதா கம்பி அடித்தளம் பில்லர் வேலைகளுக்கு 12 எம்.எம். டி.எம்.டி. கம்பி தள வேலைகளுக்கு 10 எம்.எம். டி.எம்.டி. கம்பி பயன்படுத்த வேண்டும்.

ஸ்டிரிப் ஸ்டீல்ஸ் என்ற ரிங்ஸ் வேலைகளுக்கு 10 எம்.எம். டி.எம்.டி. கம்பி பொருத்தமாக இருக்கும். ஜல்லி சிமென்ட் அடித்தள வேலைகளுக்கு ஒன்றரை இன்ச் ஜல்லிகளையும் இதர கான்கிரீட் வேலைக்கு முக்கால் இன்ச் ஜல்லிகளையும் பயன்படுத்த வேண்டும். சிமென்ட் 33 43 53 கிரேடில் கிடைக்கிறது. 53 கிரேடு உடனடியாக செட்டாகும். இதை கான்கிரீட்டுக்கு பயன்படுத்த வேண்டும். 43 கிரேடு பூச்சு வேலைக்கு அவசரமில்லா வேலைகளுக்கு 33 கிரேடு பயன்படுத்தலாம்.

கட்டுமான வேலைகளில் பயன்படுத்தும் சில வார்த்தைகளையும் அறிய வேண்டும். கட்டுமான ஏரியா வீடு எத்தனை சதுர அடியில் அமைய உள்ளதோ அந்த மொத்த பரப்பு தான் பில்ட்ட் ஏரியா. வீட்டு அறையின் 4 சுவர்களுக்கு இடையில் உள்ள இடம் கார்பெட் ஏரியா. உள் அறைக்குள் டைல்ஸ் ஒட்டும் அளவு கார்பெட் அளவிலிருந்து தான் எடுப்பர். கார்பெட் ஏரியாவோடு சேர்ந்து சுவர்களின் தடிமன் கணக்கிட்டு வரும் அளவு தான் பிளின்த் ஏரியா. கட்டட உள் மேல்பக்கம் தான் சீலிங்.

அறை உள் உயரம் குறைந்தது 10 அடி இருக்க வேண்டும். இந்த உயரம் மின்விசிறி பொருத்த வசதியானது. பில்லருக்குக் கீழே விரிக்கப்படும் ஒரு வலை போன்ற அமைப்பு தான் மேட். இது பில்லரை தாங்க அமைப்பர். இதுபோன்ற சில அடிப்படை விஷயங்களை அறிந்து கொண்டால் கட்டுமானப் பணியை நம் கண் பார்வையில் மேற்கொள்ளலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X