சுவரின் ஆயுளை அதிகரிக்க தரமான பூச்சு அவசியம்

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஒரு கட்டுமானத்தில் சிமென்ட் பூச்சு அனைத்து இடத்திலும் ஒரே மாதிரி இருக்க கூடாது. வெளி உள் சுவருக்கு ஏற்ப சிமென்ட் மணல் விகிதம் மாறுபடும். அதே போல் சுவரின் ஆயுள் அதிகரிக்க பூச்சு தரமாக இருக்க வேண்டும்.ஒரு கட்டட உள் சுவரின் பூச்சு வெளி சுவரின் பூச்சைவிட தரமாக இருக்க வேண்டும். வெளி சுவர் சொர சொரப்பாக இருந்தால் போதும். ஆனால் உள்சசுவர் மென்மையாக இருக்க வேண்டும். அதற்கு

ஒரு கட்டுமானத்தில் சிமென்ட் பூச்சு அனைத்து இடத்திலும் ஒரே மாதிரி இருக்க கூடாது. வெளி உள் சுவருக்கு ஏற்ப சிமென்ட் மணல் விகிதம் மாறுபடும். அதே போல் சுவரின் ஆயுள் அதிகரிக்க பூச்சு தரமாக இருக்க வேண்டும்.

ஒரு கட்டட உள் சுவரின் பூச்சு வெளி சுவரின் பூச்சைவிட தரமாக இருக்க வேண்டும். வெளி சுவர் சொர சொரப்பாக இருந்தால் போதும். ஆனால் உள்சசுவர் மென்மையாக இருக்க வேண்டும். அதற்கு ஏற்ப மணல் சிமென்ட் கலந்து கான்கிரீட் தயாரிப்பர். உள் சுவர் பூச்சுக்கு சிமென்ட் ஒரு பங்கு என்றால் மணல் நான்கு பங்கு கலக்க வேண்டும். வெளிச் சுவரின் பூச்சுக்கு சிமென்ட் ஒரு பங்கு கலக்கும் போது மணல் ஐந்து பங்கு கலக்க வேண்டும்.

சுவர் மேலே கான்கிரீட் பூசும் போது அதிக கனமாக பூசினால் சுவர் பலமாகும் என நினைக்க கூடாது. அதிக தடிமன் பூசினால் சுவருக்கு பாதிப்பு ஏற்படும். சுவரில் காற்றுக் குமிழ்கள் காரணமாக விரிசல் ஏற்பட வாய்ப்பு உண்டு. ஹாலோ பிளாக் பிளை ஆஷ் கற்களில் கட்டும் சுவர் மேற்பரப்பு 10 மி.மீ தடிமன் இருக்க வேண்டும் செங்கலில் கட்டும் சுவருக்கு இதைவிட அதிக தடிமன் பூச்சு தேவை. செங்கல் மேற்பரப்பு மேடு பள்ளமாக இருக்கும் போது தடிமன் அவசியம். முறையான அளவுகளுடன் பூசிய சுவர் 20 ஆண்டுகள் பாதிப்பின்றி இருக்கும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X