பொது செய்தி

தமிழ்நாடு

அக்.1 முதல் நெல்லுக்கு கூடுதல் விலை நிர்ணயம்: அமைச்சர் சக்கரபாணி தகவல்

Added : அக் 02, 2021
Share
Advertisement
ஒட்டன்சத்திரம்: 'அக்.1 முதல் கொள்முதல் செய்யும் சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.100ம், பொது ரகத்திற்கு ரூ.75ம் உயர்த்தி வழங்கப்படுவதாக' உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார். ஒட்டன்சத்திரத்தில் அவர் கூறியதாவது: மத்திய அரசு நெல் கொள்முதலை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தற்போது அறுவடை காலமாக உள்ளதால் விவசாயிகள் நலன் கருதி முதல்வர்,

ஒட்டன்சத்திரம்: 'அக்.1 முதல் கொள்முதல் செய்யும் சன்னரக நெல்லுக்கு குவிண்டாலுக்கு ரூ.100ம், பொது ரகத்திற்கு ரூ.75ம் உயர்த்தி வழங்கப்படுவதாக' உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்தார்.

ஒட்டன்சத்திரத்தில் அவர் கூறியதாவது: மத்திய அரசு நெல் கொள்முதலை ஆன்லைன் மூலம் பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. தற்போது அறுவடை காலமாக உள்ளதால் விவசாயிகள் நலன் கருதி முதல்வர், விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லை நேரடி கொள்முதல் நிலையங்கள் மூலம் உடனே கொள்முதல் செய்ய உத்தரவிட்டுள்ளார்.இதனால் மத்திய அரசின் உத்தரவுக்கு விவசாயிகள் அச்சப்படத் தேவையில்லை. சன்ன ரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.1960 லிருந்து, ரூ.100 உயர்த்தி ரூ.2060ம், பொது ரகத்திற்கு ரூ.75 உயர்த்தி ரூ.2015 ம் அக். 1 முதல் உயர்த்தி வழங்கப்படுகிறது.

திருவாரூரில் 244, தஞ்சாவூரில் 242 நேரடி கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. மயிலாடுதுறையில் முன்னதாகவே திறக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. நாகப்பட்டினத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களை திறக்க கலெக்டர் நடவடிக்கை எடுத்து வருகிறார். டெல்டா மாவட்டங்களில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம் மூலமாகவும், மற்ற மாவட்டங்களில் கூட்டுறவுத்துறை மூலமாகவும் நெல் கொள்முதல் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார். மொத்தம் 700 இடங்களில் கூட்டுறவு துறை மூலமாக நெல் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X