லோக்ஜனசக்தி கட்சி சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்| Dinamalar

லோக்ஜனசக்தி கட்சி சின்னத்தை முடக்கியது தேர்தல் ஆணையம்

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021
Share
புதுடில்லி: லோக்ஜனசக்தி கட்சியில் சிராக் பஸ்வான் மற்றும் பசுபது குமார் பராஸ் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, அக்கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.பீஹாரில் லோக் ஜனசக்தி கட்சியை 2000ம் ஆண்டு ராம்விலாஸ் பஸ்வான் துவக்கினார். மத்தியில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் மத்திய அமைச்சராக இருந்தார். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் அவர் உடல்நலக்குறைவால்
லோக்ஜனசக்தி, தேர்தல் ஆணையம், சின்னம்

புதுடில்லி: லோக்ஜனசக்தி கட்சியில் சிராக் பஸ்வான் மற்றும் பசுபது குமார் பராஸ் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து, அக்கட்சியின் சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கி வைத்துள்ளது.

பீஹாரில் லோக் ஜனசக்தி கட்சியை 2000ம் ஆண்டு ராம்விலாஸ் பஸ்வான் துவக்கினார். மத்தியில் பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணியில் மத்திய அமைச்சராக இருந்தார். கடந்த 2020ம் ஆண்டு அக்டோபரில் அவர் உடல்நலக்குறைவால் காலமானார். இதனையடுத்து இக்கட்சி தலைவராக ராம்விலாஸ் பஸ்வான் மகன் சிராக் பஸ்வான் தேர்ந்தெடுக்கப்பட்டார். இக்கட்சிக்கு லோக்சபாவில் சிராக் பஸ்வானுடன் சேர்த்து 6 எம்.பி.க்கள் உள்ளனர். இவர்களில் 5 எம்.பி.,க்கள் திடீரென சிராக் பஸ்வானுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினர். அதிருப்தி எம்.பி.,க்கள் சேர்ந்து ராம்விலாஸ் பஸ்வானின் சகோதரரும், சிராக் பஸ்வானின் சித்தப்பாவுமான பசுபதிகுமார் பஸ்வானை, பார்லிமென்ட் குழு தலைவராக தேர்ந்தெடுத்தனர். ஆனால், அதனை ஏற்க சிராக் பஸ்வான் மறுத்தார்.


latest tamil news




இந்நிலையில், லோக்ஜனசக்தியின் சின்னமான பங்களாவை முடக்குவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், சிராக் பஸ்வான் அல்ல பசுபதி பராஸ் ஆகியோர், லோக்ஜனசக்தி சின்னத்தை பயன்படுத்த அனுமதிக்கப்பட மாட்டார்கள். இடைக்கால நடவடிக்கையாக அவர்கள் தங்களது கட்சிக்கு பெயர் மற்றும் சின்னத்தை தேர்வு செய்து தெரிவிக்க வேண்டும் எனக்கூறியுள்ளது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X