சம்பவம் செய்தி

தமிழ்நாடு

குழந்தையை கடத்திய 3 பேர் அதிரடி கைது

Added : அக் 02, 2021
Share
Advertisement
கோவை: ஆனைமலையில், 5 மாத குழந்தையை கடத்திச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.கோவை மாவட்டம், ஆனைமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவர் பழைய துணிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 28-ம் தேதி அடையாளம் தெரியாத சிலர், சங்கீதாவின் 5 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்றனர். ஆனைமலை போலீசார் 20 கி.மீ., சுற்றளவில் உள்ள கண்காணிப்பு

கோவை: ஆனைமலையில், 5 மாத குழந்தையை கடத்திச் சென்ற மூவர் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாவட்டம், ஆனைமலை பழைய பஸ் ஸ்டாண்ட் அருகே, கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த சங்கீதா என்பவர் பழைய துணிகளை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். கடந்த 28-ம் தேதி அடையாளம் தெரியாத சிலர், சங்கீதாவின் 5 மாத பெண் குழந்தையை கடத்திச் சென்றனர். ஆனைமலை போலீசார் 20 கி.மீ., சுற்றளவில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். இதில், குழந்தையை கடத்திச் சென்றது, பொள்ளாச்சி சேத்துமடையைச் சேர்ந்த ராமர், 49; முருகேசன், 39 எனத் தெரிந்தது. அவர்களை கைது செய்து, குழந்தையை மீட்டனர்.

கோவை டி.ஐ.ஜி., முத்துசாமி கூறியதாவது:பொள்ளாச்சி, அங்கலக்குறிச்சியைச் சேர்ந்தவர் முத்துபாண்டி, 51; தனியார் கயிறு நிறுவன மேலாளர். இவருக்கு குழந்தை இல்லை. ஏதாவது ஒரு குழந்தையை விலைக்கு வாங்கித் தருமாறு ராமர், முருகேசனிடம் கூறியிருந்தார்.அவர்கள் இருவரும் சங்கீதாவின் குழந்தையை கடத்திச் சென்று, 90 ஆயிரம் ரூபாய்க்கு முத்துபாண்டியிடம் விற்பனை செய்துள்ளனர். மூவரும் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். குழந்தை கடத்தலில் யாராவது ஈடுபட்டால், குண்டர் சட்டம் பாயும். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X