சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ரூ.1 கோடிக்கு மேல் மோசடி: எல்.ஐ.சி., முகவர் மீது 'பகீர்'

Added : அக் 02, 2021
Share
Advertisement
சேலம்: சேலம் மாவட்டம், கெங்கவல்லி அடுத்த நடுவலுார் கிராம மக்கள், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: நடுவலுாரை சேர்ந்தவர் குணசேகரன், 60. இவர், 30 ஆண்டுக்கு மேலாக, எல்.ஐ.சி., முகவராக இருந்தார். எல்.ஐ.சி., நிறுவனத்தில், ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளதாக, பலரையும் நம்ப வைத்தார். அதை ஏற்று, 30க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி வந்தோம். அதற்கான பத்திரம் தராமல், அதன் பேரில்

சேலம்: சேலம் மாவட்டம், கெங்கவல்லி அடுத்த நடுவலுார் கிராம மக்கள், நேற்று, கலெக்டர் அலுவலகத்தில் அளித்த மனு: நடுவலுாரை சேர்ந்தவர் குணசேகரன், 60. இவர், 30 ஆண்டுக்கு மேலாக, எல்.ஐ.சி., முகவராக இருந்தார். எல்.ஐ.சி., நிறுவனத்தில், ஓய்வூதிய திட்டம் அறிமுகப்படுத்தியுள்ளதாக, பலரையும் நம்ப வைத்தார். அதை ஏற்று, 30க்கும் மேற்பட்டோர் பணம் செலுத்தி வந்தோம். அதற்கான பத்திரம் தராமல், அதன் பேரில் கடன் வாங்கியுள்ளார். அத்துடன் ஏலச்சீட்டும் நடத்தினார். அப்படி ஒருவருக்கு குறைந்தது, 2 லட்சம் முதல், 10 லட்சம் ரூபாய் வரை, தர வேண்டிய ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான பணத்தை திரும்பத்தராமல் மாயமாகிவிட்டார்.

இதுகுறித்து, கடந்த 17ல், கெங்கவல்லி போலீசில் புகார் அளித்தோம். சி.எஸ்.ஆர்., ரசீது வழங்கிய போலீசார், மேல் நடவடிக்கை எடுக்காமல் கிடப்பில் போட்டதால், கலெக்டர், எஸ்.பி.,யிடம் தனித்தனியே புகார் அளித்துள்ளோம்.இந்த மோசடிக்கு, குணசேகரன் மகள் அனிதா, மருமகன் சந்தோஷ்குமார் உள்ளிட்டோர் உடந்தை. எங்கள் மனுவை விசாரித்து, செலுத்திய பணத்தை பெற்றுத்தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறியுள்ளனர்.மருமகன் சந்தோஷ்குமார் கூறுகையில், ''ஒரு மாதமாக குணசேகரனை காணவில்லை. அவருக்கும், எங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. பொய் புகார் அளித்துள்ளனர்,'' என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X