கட்காரி சிறந்த உதாரணமாக திகழ்கிறார்: சரத்பவார் பாராட்டு

Updated : அக் 02, 2021 | Added : அக் 02, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
புனே: ''மக்கள் பிரதிநிதிகள், நாட்டின் வளர்ச்சிக்காக எப்படி பணியாற்றலாம் என்பதற்கு நிதின் கட்காரி சிறந்த உதாரணமாக திகழ்கிறார்'' என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.மஹாராஷ்டிரா மாநிலம் அஹமத் நகரில், மத்திய அரசின் திட்டங்கள் துவக்க விழாவில் அமைச்சர் நிதின் கட்காரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.விழாவில் சரத்பவார்
Nitingadkari, sharadpawar, NCP, சரத்பவார், நிதின்கட்காரி, தேசியவாதகாங்கிரஸ்,

புனே: ''மக்கள் பிரதிநிதிகள், நாட்டின் வளர்ச்சிக்காக எப்படி பணியாற்றலாம் என்பதற்கு நிதின் கட்காரி சிறந்த உதாரணமாக திகழ்கிறார்'' என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் கூறியுள்ளார்.

மஹாராஷ்டிரா மாநிலம் அஹமத் நகரில், மத்திய அரசின் திட்டங்கள் துவக்க விழாவில் அமைச்சர் நிதின் கட்காரி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விழாவில் சரத்பவார் பேசியதாவது: அஹமத் நகரில் நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள திட்டங்களை, நிதின் கட்காரி துவக்கி வைக்க உள்ளதால், தான் இந்த விழாவில் பங்கேற்றேன். நான் பங்கேற்பதை அவரும் விரும்பினார். அடிக்கல் நாட்டிய பிறகு எந்த திட்டங்களும் துவக்குவது அரிதாக தான் நடக்கும். ஆனால், நிதின் கட்காரி அமைச்சகத்தின் திட்டங்கள் எனில், விழா முடிந்த சில நாட்களில் பணிகள் துவங்கிவிடும்.


latest tamil news




மக்கள் பிரதிநிதிகள், நாட்டின் வளர்ச்சிக்காக எப்படி பணியாற்றலாம் என்பதற்கு நிதின் கட்காரி சிறந்த உதாரணமாக திகழ்கிறார். சாலை மற்றும் போக்குவரத்து துறை அமைச்சராக கட்கரி பதவி ஏற்பதற்கு முன்னர் 5 ஆயிரம் கி.மீ., அளவுக்கு தான் பணிகள் நடந்துள்ளது. ஆனால், அவர் பதவி ஏற்றதும் 12 ஆயிரம் கி.மீ., அளவுக்கு பணிகள் நடந்துள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vijayan Singapore - Singapore,சிங்கப்பூர்
03-அக்-202108:40:04 IST Report Abuse
Vijayan Singapore உண்மையில் நிதின்ஜி அவர்கள் சிங்கப்பூர் அமைச்சர்களை போல் அரசியலை கவனிக்காமல் அவர்களுடைய துறையை மட்டும் கவனிப்பது சிறப்பானது
Rate this:
Cancel
MANIAN K - Dubai ,இந்தியா
03-அக்-202107:46:37 IST Report Abuse
MANIAN K அரசியல் “வியாதிகள்” என்ற வார்த்தைக்கு உதாரணமாக விளங்கும் பவார்.
Rate this:
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
03-அக்-202107:04:46 IST Report Abuse
Kasimani Baskaran எலி ஏண் அம்மணமாக ஓடுகிறது என்று எல்லோருக்கும் தெரியும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X